கசிந்தது ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

Ranbir kapoor, Saipallavi, Yash
Ramayanam movie crew
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இப்படத்தில் ராமன், சீதையாக நடித்து வரும் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் X தளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், ஜோடி எப்படி உள்ளது?, சிறந்த ராமன் சீதை ஜோடி என ரசிகர்கள் உற்சாகமாக கமென்ட் செய்து வருகின்றனர்.

ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடக்கத்தில் சைலன்ட்டாக ஆரம்பமானது. இதன் படப்பிடிப்பு விடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இதற்கு முன்னதாக ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாஷிடன் தான் பேசப்பட்டது. ஆனால் அவர் ராவணன் கதாப்பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று கேட்டு வாங்கி நடிக்கிறார்.

ராமாயணம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் அவருடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இவர்தான் Pirates of carribean,  the lion king, Sherlock Holmes, inception, the dark knight, Dune, Interstellar, pearl harbour என உலகளவில் ஹிட்டான நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனவே, ராமாயணம் படத்தின் மேல் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மேலும் கூடின.

அந்தவகையில், படப்பிடிப்பு வீடியோ வெளியான முதலே சாய் பல்லவி ரன்பீர் கப்பூர் ஜோடி எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தோன்றியது. அதேபோல் தென்னிந்தியாவின் Natural beauty என்றழைக்கப்படும் சாய் பல்லவியை சீதையாக பார்க்க ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர். ஏனெனில், செயற்கையான அழகை நம்பி இருக்கும் நடிகை, நடிகர்களுக்கு மத்தியில், இயற்கையான அழகை பராமரித்து ஒரு தனி எடுத்துக்காட்டாக மாறியவர் சாய் பல்லவி.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஒரு நொடி - திரைக்கதையில் அதிரடி!
Ranbir kapoor, Saipallavi, Yash

மேலும், ஷியாம் சிங்கா ராய் படத்தில் 90களின் காலக்கட்டத்தின் லுக்கிலேயே தெய்வீக கலையுடன் இருந்தவர் சாய் பல்லவி. ஆகையால்தான், சாய்பல்லவியின் சீதா லுக்கைப் பார்க்க தென்னிந்தியா ரசிகர்களுக்கு தனி ஆவல் இருந்து வந்தது. இதனையடுத்து தற்போது இணையத்தில் வெளியான இந்த புகைப்படங்கள், அந்த ஆவலை மேலும் கூட்டியுள்ளது.

ஏனெனில், ரன்பீர் கப்பூர் மற்றும் சாய் பல்லவி இருவரும் அருகருகே நின்று ராமன் சீதையாக இருந்த அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன என்றே கூற வேண்டும். இப்போது இவர்களின் தோற்றங்களே மேலும் ராமாயணம் படத்தின் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com