சமந்தா
சமந்தா

ஹிந்தி படத்தில் சமந்தா : யசோதா!

சினி செய்தி
Published on

இந்திய நடிகையாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார் சமந்தா. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகும் 'யசோதா' படத்தில் நடிக்கிறார் சமந்தா. கவர்ச்சி - நடிப்பு என இருந்தவர் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சமந்தாவின் 'யசோதா' திரைப்படம் மாடர்ன் யசோதாவாக இருக்க போகிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர். 'யசோதா' திரைப்படத்திற்காக ரத்தமும், வியர்வையுமாக உழைத்திருக்கிறார் சமந்தா.

யசோதா திரைப்படம்
யசோதா திரைப்படம்

இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு மணி சர்மா இசை அமைக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் சமந்தாவின் வேறொரு பரிணாமத்தை காட்டும் என்கிறார் டைரக்டர். யசோதாவின் தரிசனம் பெற நாம் நவம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com