2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா சமந்தா?

Samantha
Samantha
Published on

நடிகை சமந்தா வெகுநாட்களாக ஒருவருடன் டேட் செய்கிறார் என்ற செய்திகள் கசிந்த நிலையில், அவர் தற்போது அவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சிட்டாடல் சீரிஸ் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதே சமயத்தில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தார். தற்போதுதான் சமந்தா ஆரோக்கியமாகி வருகிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் சமந்தாவை இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி வீட்டில் கேட்டுவருவதாக தெரிவித்தார்.

அதேபோல், சிட்டாடல் சீரிஸின் இயக்குநர் ராஜ் அவர்களை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் சென்றதாகவும் தகவல்கள் பரவின.

அதற்கேற்றவாரு சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வந்தன. தற்பொழுது பிறந்தநாள் விழா ஒன்று இவர்கள் இருவரும் இணைந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இவர்களுடைய காதலை உறுதி செய்திருப்பதாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நாக சைதன்யா தனது காதலியான சோபிதாவை கரம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது சமந்தாவும் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள், வாயடைத்துப் போய்விட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா!
Samantha

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com