நடிகர் சந்தானம், தேவயானியின் வருத்தமான கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
சிறந்த காமெடியனாக வலம் வந்த சந்தானம், பின்னர் மெயின் ஹீரோவாக களமிறங்கி பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுமே நகைச்சுவை கலந்ததாகத்தான் இருக்கும். அது அவரின் தனி ஸ்டைல் என்றே கூறலாம். சந்தானம் நடிப்பில் வெளியான 'DD Returns' படம் ரசிகர்களைத் திருப்தி செய்தது என்றே கூற வேண்டும்.
அதன்பின்னர் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படமும் நகைச்சுவையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இதனையடுத்து சந்தானம் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் நடித்தார். சமீபத்தில் சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள்.
அந்தவகையில் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷனின்போது சந்தானம் ஒரு சில விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேவயானி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் என் கணவன் நடித்திருந்தார். அதில் சந்தானம் என் கணவரை கலாய்த்து தள்ளியது எனக்கு பிடிக்கவே இல்லை. என் கணவர் அதில் நடித்தது கூட எனக்கு தெரியாது என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சந்தானம் பதிலளித்தார், “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசினோம். அப்போது இது ஒரு பவர் ஸ்டார் மாதிரியான கதாபாத்திரம் தான் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோம். முதலில் நாங்கள் ஸ்கிரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டுவிட்டு தான் நடிக்க வைத்தோம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரிடம் அனுமதி வாங்காமல், அவர் சம்மதிக்காமல் நாங்கள் எதுவும் செய்யவில்லை.” என்று கூறி இருக்கிறார்.
இதுதான் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.