பாகுபலி வில்லன் ராணாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா?

Teaching Tamil
Bahubali Rana
Published on

தெலுங்கு நடிகர் ராணாவுக்கு பாகுபலி படத்திற்கு முன்பு வரை தமிழ் தெரியாதாம். இவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததே தமிழ் சினிமா நடிகர்கள் தான். ராணா யாரிடம் தமிழ் கற்றுக் கொண்டார் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தெலுங்குத் திரையுலகில் ஆல் டைம் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் உடனே நினைவுக்கு வருவது பாகுபலி தான். இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று மிகவும் பிரபலமான திரைப்படமாக மாறியது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்க, வில்லனாக நடித்தார் ராணா டகுபதி. பாகுபலி வெளிவந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்றுவரை இப்படம் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் குறையவில்லை. ஏனெனில் இன்று பான் இந்தியத் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவருவதற்கு, அன்று விதை போட்டதே பாகுபலி தான். பாகுபலிக்கு முன் ஒருசில படங்கள் பான் இந்திய அளவில் வெளியாகி இருந்தாலும் கூட, பாகுபலியைப் போல் எந்தப் படமும் பேசப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.1,000 கோடிகளுக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் மூலம் கதாநாயகன் பிரபாஸ் எந்த அளவிற்கு புகழ் பெற்றாரோ, அதே அளவிற்கு வில்லனாக நடித்த ராணாவும் புகழ் பெற்றார். மிகவும் சக்தி வாய்ந்த வில்லனாக ராணா நடித்திருப்பார். வில்லன் ராணா, காட்டெருமையை அடக்கும் காட்சி காண்பதற்கு அற்புதமாகவும், பயங்கரமாகவும் இருக்கும். அதிலும் இரண்டாம் பாகத்தில் இவர் தனது கட்டு மஸ்தான உடலைக் காட்டி மிரட்டியிருப்பார்.

பாகுபலியின் அசல் பதிப்பு தெலுங்கு என்றாலும், மற்ற மொழிகளில் இது டப்பிங் படம் என்று எந்தவித குறையும் இல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர். பாகுபலி படத்தின் போது தான் வில்லன் ராணா டகுபதி தமிழ் கற்றுக் கொண்டதாக சமீபத்தில் அவரே கூறியிருந்தார். அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தான் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
முன்னேற்றப் பாதையில் மலையாள சினிமா!
Teaching Tamil

தமிழ் கற்றுக் கொண்டது குறித்து ராணா கூறுகையில், “தெலுங்கு மொழியை மிக எளிதாக பேசி விடுவேன். ஆனால் பாகுபலி படத்தின் தமிழ் பதிப்பிற்கு தமிழ் மொழி வசனங்கள் முதலில் எனக்கு சரியாக பேச வரவில்லை. அதிலும் மதன் கார்க்கி எழுதிய வசனங்களைப் பேச எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த நேரத்தில் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகிய இருவரும் எனக்கு உதவியாக இருந்தனர். டியூசன் எடுப்பது போல இருவரும் மாறி மாறி எனக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தனர். இவர்களின் உதவியால் தான் தமிழ் மொழி வசனங்களை என்னால் நன்றாக பேச முடிந்தது” என ராணா தெரிவித்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தைப் பார்த்தால் ராணாவின் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை தமிழ் தெரியாத ராணா, குறைந்த நாட்களிலேயே தமிழைக் கற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக பேசியிருப்பார். அது தான் தமிழ் மொழியின் சிறப்பும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com