'சட்டம் என் கையில்' பட விமர்சன அரட்டை! சைலண்டா இருந்து செமயா பண்ணிடாப்பல தம்பி சதீஸ்!
ரேட்டிங்(4 / 5)
"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்" என்று ஆபீஸ் லன்ச் நேரத்தில் செந்திலிடம் கேட்டவாரே கொண்டு வந்த டிபன் பாகஸை மேஜை மீது வைத்தார் கோபி.
செந்தில்: இன்னைக்கு no lunch. நேத்திக்கு பேமிலியோட சினிமாவுக்கு போய்ட்டேன். நைட் தூங்க லேட். இன்னைக்கு நோ சாப்பாடு. உன்கிட்ட தான் லன்ச் ஷேர் பண்ணிக்கணும்.
கோபி: Sure .. படம் எப்படி?
செந்தில்: (கோபியின் லெமன் சாதத்தையும், உருளைக்கிழங்கையும் பாதியளவு தட்டில் போட்டு கொண்டு பேச ஆரம்பிகிறார் செந்தில்) 'சட்டம் என் கையில்' படம். ஏற்காட்டில் இருக்கும் நம்ம ஹீரோ சதீஷ் வண்டியை வேகமாக ஓட்டி ஒருத்தரை ஸ்பாட் அவுட் ஆக்கிடுறாரு. டெட் பாடியை கார் டிக்கியில் போட்டுகிட்டு போற வழியில் சும்மா போகாம ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை வம்புக்கு இழுக்குறாரு. இன்ஸ் சும்மா விடுவாரா? காரோட சதீஷை ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு போய் உட்கார வச்சுடுறாரு இன்ஸ். வெளியில் காருக்குள் பிணம், உள்ள சதீஷ் மாட்டிகிட்டரா இல்லையா? ன்ற ரீதியில் படம் போகுது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நல்லவன்றாரு, இன்ஸ்பெக்டர் கெட்டவன்றாரு யார் சொல்றது உண்மைன்றது கடைசியில் தெரிய வருது.
கோபி: இவ்வளவு தான் கதையா?
செந்தில்: இதுக்கப்புறம் தான் கதையே. கடைசி இருபது நிமிடம் வேற லெவல் ட்விஸ்ட் இருக்கு. இதை நான் சொல்ல மாட்டேன். நீ படம் பார்த்து பீல் பண்ணு. தமிழில் ஒரு மலையாள திரில்லர் படம் பார்த்த பீலிங்கை தந்திருக்காரு இந்த படத்தோட டைரக்டர் சாச்சி.
கோபி: காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவா? பயங்கர காமெடியா இருக்குமே?
செந்தில்: அதுதான் இல்லை. ஒரு துளி கூட காமெடி கிடையாது. ஒரு திரில்லர் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக தந்திருக்காரு சதீஷ். சைலண்டா இருந்து செமையா பண்ணிட்டாப்பல தம்பி சதீஷ். அஜய் ராஜ், பாவல் கீதன், பவா செல்லதுரை, மைம் கோபி என போலீஸ்காரங்க எல்லோருமே நல்லாவே பிக்ஸ் ஆயிடுறாங்க. கேமரா ஒர்க் ஒகேன்னு சொல்லலாம்.
கோபி: ஹீரோயினை பத்தி சொல்லவே இல்லையே?
செந்தில்: நீ இப்படி கேட்பன்னு தெரியும், படத்துல ஹீரோயின் யாருமே கிடையாது. கதைக்கு தேவை இல்லைன்னு டைரக்டர் வைக்கல. இருந்தாலும் படம் நல்லா இருக்கு. போய் பாரு. என் பார்வையில் ரேட்டிங் 4 தரலாம்.
கோபி: இவ்வளவு தூரம் சொன்னதுக்கப்புறம் நான் பார்க்காமல் இருப்பேனா? இன்னைக்கு பேமிலியோட 'சட்டம் என் கையில்' படத்துக்கு போறேன். ஸோ, நாளைக்கு எங்க வீட்டில் சமையல் கிடையாது. எனக்கும் சேர்த்து லன்ச் எடுத்துட்டு வந்துடு.