பரோட்டா போடும் ‘சாட்டை’ படம் ஹீரோ!

சாட்டை யுவன்
சாட்டை யுவன்

சினிமா என்பது ஒரு பெருங்கடல். இதில் மூழ்கி முத்து எடுப்பவர்கள் வெகு சிலர். மூழ்கியவர்கள் பலர். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், வேறொரு துறையில் நல்ல வாழக்கையை அமைத்து கொள்பவர்கள் வெகு சிலர். இந்த வெகு சிலரில் ஒருவராக இருக்கிறார் சாட்டை படத்தில் ஹீரோவாக நடித்த யுவன். 

சாட்டை பட ஹீரோ தற்சமயம் சென்னை ஈ சி ஆரிலும், துபாயிலும் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார் ஒரு பிரபல யுடியூப் சேனல் யுவன் வைத்துள்ள ஹோட்டலுக்கே சென்று பேட்டி எடுத்துள்ளது. ஹோட்டலில் கொத்து ப்ரோட்டா போட சொல்லிக்கொடுத்து கொண்டே பல்வேறு சுவரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.   

சாட்டை பட வெற்றிக்கு பின் பல பட வாய்ப்புகள் வந்துள்ளன. சில படங்கள் வெற்றி பெற வில்லை. சில படங்கள் படபிடிப்புடன் நின்று விட்டது.பாலா இயக்கும் படத்தில் கமிட் ஆன யுவன் படத்தில் ஹோட்டலில் வேலை செய்யும் பையனாக நடிக்க  ஒரு ஹோட்டலில் வேலை செய்துள்ளார். பாலா படம் தொடர்ந்து தள்ளி போனதால் சினிமாவுக்காக தான் கற்ற ஹோட்டல் பயிற்சியை நம்பி சென்னையிலும், துபாய்யிலும் ஹோட்டல் தொடங்கி விட்டார்.

கொரோனா லாக் டவுன் முடிந்த உடன் ரெஸ்டாரன்ட் தொடங்கியதால் நல்ல  வரவேற்பை பெற்று, லாபகரமாக தொழில் நடப்பதாக சொல்கிறார்  யுவன். குறைந்த விலையில் தரமான உணவு தருவதே எங்கள் உணவகத்தின் தாரக  மந்திரம் என்கிறார்.பாலா மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார்.மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்றால் 'யோசிக்கவில்லை என்கிறார்.

தனது தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தும் தான் சினிமாவில் தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்த தொழிலை லாபகரமாக செய்து ஒரு இளம் தொழில் முனைவராக மாறி வரும் யுவனை பாராட்டுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com