ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வில்லன் VECNA-வின் ரகசியம் இதுதான்! 001-ன் பகீர் பிளாஷ்பேக்!

Vecna
Vecna
Published on

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4-ல வந்து எல்லாரையும் அலறவிட்ட வில்லன்தான்‌ வெக்னா (Vecna). பார்க்கவே குரூரமா, மண்டை இல்லாம, நரம்புகளால பின்னப்பட்ட உடம்போட இருக்கிற இவனைப் பார்த்தாலே பயம் வரும். ஆனா, இவன் யாரு? எங்க இருந்து வந்தான்? இவனோட சக்தி என்ன? இதையெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

ஹென்றி கிரீல் டு வெக்னா!

வெக்னாவோட உண்மையான பேர் ஹென்றி கிரீல் (Henry Creel). சின்ன வயசுல இருந்தே இவன் ரொம்ப வித்தியாசமானவன். மத்த பசங்க மாதிரி விளையாடாம, சிலந்திகளை ரசிச்சுக்கிட்டு, தனிமையிலயே இருந்தான். அவனுக்கு இந்த உலகம், மனுஷங்களோட வாழ்க்கை முறை எதுவுமே பிடிக்கல. எல்லாரும் ஒரே மாதிரி ரோபோட் மாதிரி வாழ்றத வெறுத்தான். அவனுக்குள்ள ஒரு விதமான சக்தி இருக்கிறத உணர்ந்தான்.

ஒரு நாள், அவன் குடும்பத்தோட புது வீட்டுக்கு குடி போறாங்க. அங்க அவனுக்கு சிலந்தி வலைகள் மேல இருந்த ஆர்வம் அதிகமாகுது. அது மட்டும் இல்லாம, அங்க ஒரு பழைய கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறான். அந்த கடிகாரம்தான் அவனுக்கு நேரத்தைப் பத்தின ஒரு புரிதலைக் கொடுக்குது.

தன்னோட சக்தியைப் பயன்படுத்தி சின்னச் சின்ன விலங்குகளைக் கொன்னு பழகுறான். கடைசில, அவங்க அம்மாவையும் தங்கச்சியையும் கொன்னுட்டு, அப்பாவை ஜெயில்ல தள்ளிட்டு, தான் செத்துட்டதா எல்லாரையும் நம்ப வைக்கிறான்.

டாக்டர் பிரென்னர்!

ஹென்றியோட சக்தியைப் பத்தி தெரிஞ்சுகிட்ட டாக்டர் பிரென்னர், அவனைத் தன் லேபுக்குக் கூட்டிட்டுப் போய் "001" (One) அப்படின்ற பேர்ல ஆராய்ச்சி செய்யுறார். ஆனா, ஹென்றி ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கிறதால, அவனால கண்ட்ரோல் பண்ண முடியாம, அவனோட சக்தியை அடக்குறதுக்கு அவனோட கழுத்துல ஒரு சிப்பை பொருத்துறாங்க. பல வருஷமா அந்த லேப்ல வேலை பார்க்குறான்.

அங்கதான் "லெவன்" (Eleven) அறிமுகமாகுறா. லெவனோட சக்தி மேல ஈர்க்கப்பட்ட ஹென்றி, அவளுக்குப் பல விஷயங்களைக் கத்துக்கொடுக்கிறான். கடைசில, லெவனை ஏமாத்தித் தன் கழுத்துல இருந்த சிப்பை எடுக்க வைக்கிறான். சிப் போனதும் அவனோட முழு சக்தியும் வெளிப்படுது. லேப்ல இருந்த எல்லாரையும் கொடூரமா கொல்றான்.

அப்சைட் டவுன் உலகம்!

லெவனுக்கும் ஹென்றிக்கும் நடக்குற சண்டையில, லெவன் தன்னோட முழு சக்தியையும் பயன்படுத்தி ஹென்றியை "அப்சைட் டவுன்" (Upside Down) உலகத்துக்குத் தள்ளிடுறா. அங்க போற வழியில அவனோட உடம்பு முழுக்க எரிஞ்சு, சிதைஞ்சு, கடைசில நாம பார்க்கிற அந்த அரக்கன் வெக்னாவா மாறிடுறான்.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Vecna

வெக்னாவின் சக்திகள்!

வெக்னாவுக்கு பொருட்களை மனசால் நகர்த்துவது, மனதைப் படிப்பது அப்படின்னு பல சக்திகள் இருக்கு. முக்கியமா, மனதளவில் சோகத்துலயும், குற்ற உணர்வுலயும் இருக்கிறவங்களைத் தேர்ந்தெடுத்து, அவங்க மனசுக்குள்ள புகுந்து, அவங்களைக் கொடுமைப்படுத்திக் கொல்றான். ஒவ்வொரு தடவை யாரையாவது கொல்லும்போதும், அவனோட சக்தி அதிகமாகுது. அவனால அப்சைட் டவுனுக்கும் நம்ம உலகத்துக்கும் கேட் திறக்க முடியும்.

பலவீனம்!

இவ்வளவு பவர்ஃபுல்லா இருந்தாலும், வெக்னாவுக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு. அதுதான் இசை. ஒருத்தரை அவன் கொல்ல முயற்சிக்கும்போது, அவங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் போட்டா, அவங்க அந்த மாயையில இருந்து தப்பிக்கலாம். அப்புறம், நெருப்பு. நெருப்பைக் கண்டா அவனுக்குப் பயம். அவனோட உடம்பு தீயால சீக்கிரம் பாதிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
பாலிவுட்டில் களமிறங்கும் அஜித் பட வில்லன்..!!
Vecna

வெக்னா ஒரு சாதாரண வில்லன் கிடையாது. அவன் ஒரு காலத்துல நம்மள மாதிரி மனுஷனா இருந்தவன்தான். ஆனா, அவனோட தவறான எண்ணங்களும், கோபமும் அவனை ஒரு அரக்கனா மாத்திடுச்சு. சீசன் 5 சமீபத்துல தான் Netflix-ல வெளியாகி இருக்கு. சீக்கிரமா போய் அவனை எப்படி கொல்றாங்கன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com