ராயன் பட பாடல் வெளியீடு... எப்படி இருக்கு? செல்வராகவன் போட்ட நெகிழ்ச்சி பதிவு!

Raayan Movie First Song
Raayan Movie First Song

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ‘அடங்காத அசுரன்’ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் சேர்ந்து இப்பாடலை பாடியுள்ளனர். அதற்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் செல்வராகவன் பாடல் குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று (மே 09) வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார்.

இந்த பாடலை ரசிகர்கள் வைப் செய்து வரும் நிலையில் தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவனும் பாடல் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளாஅர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாட்டு முழுக்க என் தலைவன் ஏ.ஆர். ரகுமான் ராஜ்ஜியம் தான் !! இப்படி ஒரு பாட்டு என் வாழ்நாளில் கேட்டதில்லை ! நாடி நரம்பெல்லாம் புடைக்கும் இசை !” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - ரசவாதி: தலைப்பு ஸ்ட்ராங், திரைக்கதை வீக்!
Raayan Movie First Song

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது. தனுஷ், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து முதல் முறை பாடியுள்ளது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடங்காத அசுரன் தான்.. வணங்காத மனுஷன் தான் என்ற வரிகளில் வரும் இந்த பாடல் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் போன்று இருக்கிறது. இது கெத்தாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட்டாக மாறும். அடுத்து சில நாட்களில் இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com