வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்!

Shah Rukh Khan.
Shah Rukh Khan.

Dunki படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கானின் அடுத்தப் படத்திற்கான வதந்திகள் ஆரம்பமாகிவிட்டன. அந்த வதந்திகளுக்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஷாருக்கான்.

சென்ற ஆண்டு ஷாருக்கான் மூன்றுப் படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார். பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய படங்கள் நல்ல வசூலை ஈட்டியது. அந்தவகையில் இந்த மூன்றுப் படங்களும் ரூ 2600 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்தது. ஷாருக்கானின் சினிமா கெர்ரியரிலேயே டங்கி படத்தின் மூலம் பத்தாவது முறையாக ஷாருக்கானின் படம் 100 கோடி வசூல் செய்தது. இதற்கு முன்னர் ரா ஒன், டான் 2, ஜாப் தக் ஹாய் ஜான், சென்னை Express, ஹேப்பி நியூ இயர், தில்வாலே, ரயீஸ், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைச் செய்தப் படங்களாகும். ஆனால் இவையனைத்துமே ஷாருக்கானைத் திருப்திப் படுத்தவில்லை என்பதால் அடுத்தடுத்தப் படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்தவகையில் இந்த ஆண்டு ஷாருக்கான் சுஜோய் கோஷ் இயக்கத்தில் 'கிங்' என்றப் படத்தில் நடிக்கப்போவதாகவும், அது ஒரு ஆக்ஷன் மூவியாக இருக்கும் எனவும் செய்திகள் பரவின. அதேபோல் இந்தப் படத்தில் அவருடைய மகள் சுஹானா கானும் சேர்ந்த நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இவை அதிகாரப்புர்வ அறிவிப்பாக இல்லை என்பதால் வதந்திகளாகவே பார்க்கப்பட்டன.

இந்தநிலையில் தற்போது ஷாருக்கான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இப்படத்தில் அவரின் கதாப்பாத்திரம் இதற்கு முன்னர் நடித்த கதாப்பாத்திரங்களை விட மிகவும் யதார்த்தமான கதாப்பாத்திரமாக இருக்கும் என்று ஷாருக்கான் கூறினார். அதேபோல் பார்ப்பவர்கள் கதாப்பாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறினார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் என்ற செய்திகளும் வெளியாகிவுள்ளன.

இதையும் படியுங்கள்:
"நானும் என் குடும்பமும் மன உளைச்சலில் இருக்கிறோம்" வதந்திகளுக்கு  நடிகை நிவேதா பெத்துராஜின் பதிலடி!
Shah Rukh Khan.

ஆனால் இப்படத்தை இயக்குவது சுஜோய் கோஷா?, சுஹானா கான் அவருடன் நடிப்பாரா? இல்லை இது வேறு ப்ராஜெக்ட்டா? போன்ற எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com