ஒருகாலத்தில் 13 படங்களில் நிராகரிக்கப்பட்ட நடிகை ஒருவர், தற்போது 100 கோடி வசூல் செய்து சாதனைப் படைக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் யார் என்று பார்ப்போமா?
சினிமாவில் எவ்வளவு பேர் தடம் பதித்தாலும், பல கஷ்டங்களைத் தாண்டி சினிமாவில் திடமாக பயணம் செய்பவர்களே முன்னேறியிருக்கிறார்கள். அப்படித்தான் நடிகை வித்யா பாலனும்.
வித்யா பாலன் தனது திரைப் பயணத்தை 1995 ஆம் ஆண்டு "ஹம் பாஞ்ச்" என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தொடங்கினார். பின்னர், பல்வேறு இசை வீடியோக்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தார். 2003 ஆம் ஆண்டு "Bhalo Theko" என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பாலிவுட்டில் அவர் 2005 ஆம் ஆண்டு வெளியான "Parineeta" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு, வித்யா பாலன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "Lage Raho Munna Bhai", "Guru", "Heyy Babyy" மற்றும் "Bhool Bhulaiyaa" போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வெளியான "Paa" திரைப்படத்தில் புரோஜெரியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக நடித்ததற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார்.
2011 ஆம் ஆண்டு வெளியான "The Dirty Picture" திரைப்படம் வித்யா பாலன் திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் அவர் சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையின் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்ததற்காக தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். தொடர்ந்து, "Kahaani" (2012) போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படி அவர் தனது திரைப் பயணத்தை படிபடியாக ஏறினாலும். எத்தனை முறை அதில் சறுக்கினார் என்பதும் சொல்ல வேண்டிய ஒன்று.
ஒருமுறை தனது பயணத்தில் நடந்த மோசமான விஷயத்தை குறித்து பேசினார்.
அதாவது ஒரு தயாரிப்பாளர் வித்யா பாலன் அழகாகவே இல்லை என்று கூறி மிகவும் மோசமாக நடத்தியதுடன் அசிங்கமாகவும் பேசியிருக்கிறார். இதனால் அவர் 6 மாதங்களாகவே கண்ணாடியை பார்க்கவில்லையாம். ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து, நிராகரிக்கப்பட்டபோது, தயாரிப்பாளர் அவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறியிருக்கிறார்.
அந்த சமயத்தில் மட்டும் மொத்தம் 13 படங்களில் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், தற்போது முன்னணி நடிகர்களுடனும், 100 கோடி வசூல் செய்த படங்களிலும் நடித்திருக்கிறார் என்றால், பாருங்களேன்.