சல்மான் கானுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா! எந்த படத்தில் தெரியுமா?

Rashmika and Salman khan
Rashmika and Salman khan

கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, தற்போது மற்றொரு பாலிவுட் படத்தில் கம்மிட்டாகி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான் கானுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார், ராஷ்மிகா. இதனால், இணையத்தில் ராஷ்மிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, அப்படத்தின் மூலமே தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர், National Crush ஆக வலம் வரும் இவரின் படங்கள் தொடர் ஹிட்களை கொடுக்க ஆரம்பித்தன. இவரின் திறமையான நடிப்பு முதலில் டோலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு இவரை அழைத்து வந்தது. சுல்தான், வாரிசு ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை பெற்ற இவர், பின்னர் புஷ்பா படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படமே அவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் வர காரணமானது.

அந்தவகையில், ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா அனிமல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், ராஷ்மிகா கெர்ரியரை வளர்த்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில், படத்தின் கதை எப்படி இருந்தாலும், ராஷ்மிகாவிற்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்கு நன்றாகவே அவர் உயிர் கொடுத்திருந்தார். இதனால், பாலிவுட் இயக்குனர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. அனிமல் படத்திற்கு பிறகு ராஷ்மிகா நடிக்கும் படத்தின் எந்த ஒரு அறிவிப்பு இல்லை. ஆனால், தற்போது ராஷ்மிகா மற்றொரு படத்தில் நடிக்கவிருக்கும் செய்திகள் வந்துள்ளன.

சமீபத்தில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘ஷிகந்தர்’ என்று பெயரிடப்பட்டது. இந்த படமானது அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்ற அப்டேட்டை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் படத்தின் புதிய அறிவிப்பு!
Rashmika and Salman khan

அந்தவகையில், தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஷிகந்தரில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இவர்களின் ஜோடியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com