நடிகர் பிரசாந்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சினிமாவில் வெற்றிபெறவும், வாழ்வில் வெற்றிபெறவும் மூன்று அட்வைஸ் வழங்கியிருக்கிறார். அவை யாது என்பதைப் பார்ப்போம்.
90ஸ் கிட்ஸ் ஃபேவரட் நடிகர் பிரசாந்த் 1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு சிறந்த அறிமுக விருதும் வாங்கினார். பின்னர் அடுத்த ஆண்டே மலையாள திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2006ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், நான்கு ஆண்டுகள் பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார்.
பின்னர் 2011ம் ஆண்டு பொன்னர் சங்கர், மம்பட்டியான் என்ற இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக அமைந்தன. பின்னர் மீண்டும் ஐந்து வருடங்கள் இடைவெளிக்கு பின்னர், சாகசம் படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. ஒரு வருட இடைவெளிக்கு பிறகு இவர் ஜானி மற்றும் வினய விதேய ராமா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், ஹீரோவாக இல்லை, குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இந்த இடைவெளிகள் அவரின் சினிமா பயணத்தை பெரிய அளவு பாதித்தது. அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் வருடம் நான்கைந்து படங்களில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரசாந்த் திரைத்துறைக்கு அறிமுகமான புதிதில் அவருடைய அப்பா தியாகராஜரிடம் சிவாஜி, பிரசாந்தை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தியாகராஜன் பிரசாந்தை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிவாஜி பிரசாந்திற்கு மூன்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
அதாவது;
1. காலைல 6 மணிக்கு ஷூட்டிங்னா, 5.30 மணிக்கெல்லாம் நீ அங்க போய்டனும்.
2. டைரக்டர் என்ன சொன்னாலும் கேட்டுக்கனும். மறு பேச்சு பேசக்கூடாது.
3. மூன்றாவது முக்கியமானது, ஹீரோயின்ஸ் கூட எந்த சவகாசமும் வச்சுக்கக்கூடாது.
என்று கூறிவிட்டு, “இவைதான் மிகவும் முக்கியமானவை. இதை நான் என் மகனுக்கு கூட சொன்னதில்லை. ஆனால், உனக்கு நான் சொல்கிறேன். ஏனா, நீ பெரிய ஆளா நிச்சயம் வருவ…” என்று பிரசாந்திடம் கூறியிருக்கிறாராம்.