மும்பை வீட்டில் நகர்ந்த அமானுஷ்ய பொம்மை: மிரண்ட போன ஸ்ருதி ஹாசன்: தப்பித்தது எப்படி?

வீட்டில் தனக்கு நடந்த மர்ம நிகழ்வுகள் குறித்து ஸ்ருதி ஓபன் டாக்!
Shruthi Hassan Haunted Mansion
Shruthi Hassan Haunted Mansion kalki
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி நடத்திய 'டபுள் டேட்' என்னும் பெயரைக் கொண்ட நேர்காணலில், ஸ்ருதி ஹாசன் தான் சந்தித்த பயங்கரமான அமானுஷ்ய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அவரது சொந்த அனுபவத்தை கேட்ட ரசிகர்கள் பலரும் மிரண்டு போய் உள்ளனர். இதற்கு முன்னர் இது போன்ற காட்சிகளை எல்லாம் சினிமாக்களில் மட்டுமே கண்டு களித்த ரசிகர்களுக்கு , ஸ்ருதியின் பயங்கர அனுபவம் திகிலை கூட்டியுள்ளது. தற்போது ஸ்ருதியின் அந்த நேர்காணல் வைரலாகிக் கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஸ்ருதி பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது என்னவோ டோலிவுட் தான். டோலிவுட்டில் அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட்டாக அந்த பக்கமே ஒதுங்கி விட்டார். ஆனாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தலைக்காட்டி வருகிறார். 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் , அதற்கு முன்னரே கமல்ஹாசனின் மகள் என்பதால் பிரபலமாக இருந்தார்.

ஸ்ருதி இறுதியாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ' கூலி ' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகளை கடந்தும் தென்னிந்திய திரை உலகில் ஸ்ருதி ஹாசன் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

தனது நேர்காணலில் ஸ்ருதி ," தனக்கு எப்போதும் விசித்திரமான ஆற்றல்களை அறியும் திறன் உள்ளது, அது ஒரு சில நேரங்களில் நிகழ்கிறது. சென்னையில் உள்ள எனது வீட்டில் எந்த ஒரு எதிர்மறையான ஆற்றல் இருந்தது இல்லை. ஆனால், எனது மும்பை வீட்டில் விசித்திரமான ஆற்றல் இருந்ததை நான் உணர்ந்தேன். நான் பியானோ என்று பெயரிட்ட மனித உருவ பொம்மையை வீட்டில் வைத்திருந்தேன்.

அந்த பொம்மை எனக்கு நெருக்கமானவர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனது , நான் அதற்கு உடை எல்லாம் அணிவித்து இருந்ததால் , மற்றவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அந்த பொம்மை அடிக்கடி நகரத் தொடங்கியது. அது அடிக்கடி நகரத் தொடங்கியதை நான் உணர்ந்தேன். ‘ஐ ஆம் லெஜண்ட்’ திரைப்படத்தில் பொம்மைகள் மர்மமான முறையில் நகர்வதைப் போன்று, பியானோ பொம்மையும் நகர்ந்தது. அதனால், எனக்கு மனதில் பயமும் பதட்டமும் குடி கொண்டது.

God Hanuman
God Hanuman

அந்த நேரத்தில் தான் ஹனுமன் சலீசாவை பாடிக் கொண்டே கைகளில் உப்பையும் வைத்துக்கொண்டு அந்த பொம்மையை அகற்றியதாக கூறியுள்ளார். அந்த பொம்மையை வீட்டை விட்டு அகற்றிய பின்னர் , அந்த வீடு அமைதியாக இருக்கிறது. மேலும் ஸ்ருதி தனது மத நம்பிக்கைகளை பற்றியும் முன்பு ஒருமுறை வெளிப்படையாக பேசியுள்ளார். கமல்ஹாசன் குடும்பத்தில் அனைவரும் நாத்திகர்களாக இருந்தபோதிலும் தனக்கு மட்டும் மத நம்பிக்கை இருப்பதாக கூறியிருக்கிறார்.

தங்கள் வீட்டில் மதம் சார்ந்த எந்த ஒரு நாளும் எந்த ஒரு வழிபாடும் இல்லை . அதனால், குறிப்பிட்ட நாட்களில் எந்த ஒரு மத சடங்குகளும் , அசைவம் சாப்பிட தடை என்பதெல்லாம் இல்லை. அது பற்றி பேசினால் தனது தந்தை கோபித்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளார். தற்போது ஸ்ருதி இயற்கை சார்ந்த ஆன்மீகம், சடங்குகள் , சூனியம் ஆகியவை கொண்ட நவீன பேகன் மதமான விக்காவை பின்பற்றி வருகிறார்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் புறா கூடு லட்சுமி கடாட்சம் தருமா? வாஸ்து சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Shruthi Hassan Haunted Mansion