சித் ஸ்ரீராம் ரசிகர்களுக்கு குட்நியூஸ்... சென்னையில் மாஸ் கான்செர்ட்... எப்போது தெரியுமா?

Sid Sriram
Sid Sriram
Published on

சென்னையில் இன்னும் சில தினங்களில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.

சமீப காலமாக இசை கச்சேரிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், விஜய் ஆண்டனி, யுவன் என அனைத்து இசை ஜாம்பவான்களை காண ரசிகர்கள் அடித்து பிடித்து செல்கின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகு மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கலக்கி வரும் சித் ஸ்ரீராம் கான்சர்ட் நடைபெறவுள்ளது.

சென்னையில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து, இளம் வயது முதல் வெளிநாட்டவராகவே வளர்ந்து வந்தவர் தான் சித் ஸ்ரீராம். சிறுவயது முதலே இவர் இசையை முறையாக கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில், மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான 'கடல்' என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த 'அடியே' என்கின்ற பாடலை பாடி தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

இவரின் இசை கச்சேரி தொடர்பாக நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலில், சென்னையில் பிறந்து வளர்ந்த சித் ஸ்ரீராம், மீண்டும் தனது சொந்த மண்ணில் இசை கச்சேரி ஒன்றை நடத்தவிருக்கிறார். அண்மையில் அவர் 'Coachella Valley Music and Arts Festival 2024ல்' கலந்து கொண்டு அசத்தியதை போலவே நடக்கவிருக்கும் இந்த இசை கச்சேரியில் அவர் அசத்த உள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
GOAT பட கதை இதுதானா? லீக்கான தகவலால் ரசிகர்கள் குஷி!
Sid Sriram

மதிப்பிற்குரிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களே பலமுறை வியந்து பாராட்டிய ஒரு மாபெரும் பாடகர் தான் சித் ஸ்ரீராம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்த்தியாக பாடும் திறன் கொண்ட ஒரு எல்லையற்ற கலைஞர் தான் ஸ்ரீ ராம் என்றும் அந்த நிறுவனம் புகழாரம் சூட்டியிருக்கிறது.

மேலும் இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இதற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்திருக்கிறது. 'Paytm Insider' மற்றும் 'Book My Show' உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகளை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com