GOAT பட கதை இதுதானா? லீக்கான தகவலால் ரசிகர்கள் குஷி!

GOAT Movie
GOAT Movie

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தின் கதை குறித்த விவரம் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

GOAT திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
சிவகார்த்திகேயனுடன் நடித்த அட்லீ மனைவி பிரியா… இது எப்போ…?
GOAT Movie

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைத்ததை தொடர்ந்து தற்போது தங்கை பவதாரிணியின் குரலையும் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால், விஜய் ரசிகர்கள் GOAT படத்திற்கும், விஜய்யின் கடைசி படத்திற்காகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. முன்னதாக இது டைம் டிராவல் கதை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் GOAT பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com