சிம்புவின் ‘அரசன்’ ட்ராப் ஆனதா? வெற்றிமாறன் கூட்டணி முறிந்ததா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!

வெற்றிமாறன் - சிம்புவின் அரசன் திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற வதந்திக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
simbu vetrimaran
Arasan simbuChennai City news
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த அரசன் திரைப்படம் ட்ராப் ஆனதாக கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. பெரும்பாலும் நடிகர் தனுஷை வைத்து அதிக வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அவர் முதல் முறையாக சிலம்பரசன் உடன் கூட்டணி சேர்ந்தது இந்த திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட வட சென்னை திரைப்பட நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். தனது வழக்கமான கூட்டணியில் இருந்து மாறி, சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கியதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் முதல் முறையாக சிலம்பரசனுக்கு இசையமைத்துள்ளார் , அது மட்டுமல்லாமல் வெற்றிமாறன் திரைப்படத்திற்கும் அவர் இசையமைப்பது இதுவே முதன்முறை. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். தாணு இதற்கு முன்னர் தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தில் சிலம்பரசன் வைத்து தயாரித்து இருந்தார்.

எப்போதும் ஃபேண்டஸி அல்லது மசாலா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சிம்பு , ஆழமான கதை அம்சங்களை கொண்ட வெற்றிமாறன் திரைப்படங்களில் நடிப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது. அரசன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இதுவரை பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளை படமாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டுள்ளது.

அரசன் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் யுனிவர்சில் வரும் என்றும், அதை திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் பலரும் இந்த திரைப்படத்திலும் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் கதை வடசென்னை முதல் பாகத்திற்கு முந்தையது என்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு இருந்தன . அரசன் திரைப்படம் வெளிவந்த பிறகு வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுக்க இருந்தார். தொடர்ச்சியாக அரசன் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் சமீபத்திய சில மாதங்களாக, படத்தைப் பற்றி அறிவிப்புகள் எதுவும் இன்றி இருக்கிறது. இதனால், அரசன் திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

Simbu Anirudh
simbu thanu anirudh Mid - Day

இது பற்றி பேசிய திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு , வழக்கமாக பெரிய நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஒரு நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனரின் பேச்சைக் கேட்பார், அதே நடிகர் வளர்ந்த பின்னர் இயக்குனரிடம் முரண்படுவார். இருவருக்கும் இடையில் படத்தினைப் பற்றி எதிர்பார்ப்புகளும் முரண்பாடுகளும் வரும்.

சூர்யாவின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாலா முக்கிய காரணம் என்றாலும் நந்தா, பிதாமகன் திரைப்படங்களில் பணியாற்றியபோது வராத கருத்து வேறுபாடு , வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிக்கும் பொழுது ஏற்பட்டது. சூர்யா பெரிய நட்சத்திரமாக மாறி இருந்ததால் அவருடைய எதிர்பார்ப்புகளுக்கும் பாலாவின் அணுகுமுறை அணுகுமுறைக்கும் முரண்பாடுகள் இருந்ததால், சூர்யா அந்த திரைப்படத்திலிருந்து விலகினார்.

சிம்புவும் வெற்றிமாறனும் புதிதாக இணைந்ததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தாலும் அதை மோதலாக பார்க்க கூடாது. சிம்பு திரைப்படத்திலிருந்து விலகினார் ,வெற்றிமாறனுக்கும் அவருக்கும் சண்டை, அதனால் திரைப்படம் கைவிடப்பட்டது, என்று வெளியாகும் தகவல் அனைத்தும் வெறும் வதந்திகள், என்று பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com