நான் சினிமாவுக்கு வர சிம்புதான் காரணம்! – நெல்சன் ஓபன் டாக்!

Nelson Dilipkumar
Nelson Dilipkumar
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இயக்குநர் நெல்சன், தான் சினிமாவுக்கு வருவதற்கு சிம்புதான் காரணம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் எப்படி சிம்புவை சந்தித்தார், சினிமாவில் நுழைந்தார் என்பதைப் பார்ப்போம்.

நெல்சன் திலிப்குமார் முதல்முறையாக 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நயன்தாரா மற்றும் யோகி பாபு வைத்து படம் எடுத்தார். இந்தப் படம் நல்ல ஹிட் ஆனது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் படம் எடுத்தார். இந்தப் படமும் நல்ல வசூல் செய்தது. நெல்சனின் மூன்றாவது படம்தான் பீஸ்ட். தளபதி விஜய் வைத்து இயக்கிய இந்தப் படமும் விஜய்க்காக ஹிட்டானது என்று கூறினாலும், நெல்சனின் இயக்கமும் மக்களுக்கு மிகவும் பிடித்தது.

தளபதிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தை இயக்கினார்.

இப்படி படிபடியாக சூப்பர் ஸ்டார் வரை வந்த நெல்சன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக மாறினார்.

இவரின் படத்திற்கான எதிர்பார்ப்பைவிட, இவரின் Announcement வீடியோக்கே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் அவர் தற்போது கவினின் ப்ளெடி பெக்கர் படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ‘ஒற்றைப் பனை மரம்’ கடலுக்கு அப்பால் ஒரு கூக்குரல்!
Nelson Dilipkumar

அந்தவகையில் நெல்சன் சினிமாவிற்கு வந்ததை குறித்து பேசியதைப் பார்ப்போம். “சிம்பு சார் எனக்கு School Mate. ரொம்ப வருஷம் கழிச்சு விஜய் டிவி ஷோல அவர நான் மீட் பண்ணேன். அப்போ அவர் வல்லவன் படத்துல நடிச்சுட்டு இருந்தாரு. படத்துல work பண்ண வரியான்னு என்ன கேட்டாரு… நான் இல்ல சார் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுல இருந்து எங்க நட்பு நீடிச்சது… அதுக்கு அப்றம் தான் சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பிச்சது. அதுக்கு காரணம் சிம்பு சார்தான்.” என்று பேசினார்.

நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஒரு படம் அப்படியே முடிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நெல்சன் ஜெய்லர் 2 படத்தை இயக்கவுள்ளார். பின் தனுஷ் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தன.  

logo
Kalki Online
kalkionline.com