அட… இதுதான் Thuglife சிம்பு லுக்கா? நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

Thuglife Kamalhassan
Kamalhassan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் Thug life படத்தில் நடிகர் சிம்பு இணைவதாக முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது சிம்பு லுக் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் நாளை காலை Thug life படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug life படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டே செய்திகள் வந்தன. த்ரிஷா தனது கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்து விட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். அந்தவகையில் முதலாவதாக தக்லைஃப் படத்திலிருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகுவதாக செய்திகள் கசிந்தன.

அவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புறநானூறூ படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால், பிஸி லைனப்பில் உள்ள துல்கருக்கு தக்லைஃப் படத்தில் நடிக்கப் போதிய நாட்கள் இல்லாததால் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அடுத்ததாக ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஏனெனில் ப்ரெதர், ஜீனி உட்பட இந்த ஆண்டு மட்டும் அவர் 4 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ஆகையால் தேதி கிடைக்காமல்தான் அவரும் விலகியதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் படத்திலிருந்து விலகிய நடிகர்களுக்கு பதிலாகப் புதிய நடிகர்களைத் தேர்ந்தெடுக்க படக்குழு பல நடிகர்களிடம் பேசி வந்தது. இதனையடுத்து துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அவரை வைத்து ஏப்ரல் மாதம் இறுதிக்குள் சிம்புவின் போர்ஷனை முடிக்கப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இந்த செய்தியும் அதிகாரப்பூர்வமானது.

இதையும் படியுங்கள்:
விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
Thuglife Kamalhassan

இதற்கிடையே சிம்பு தனது கடின உழைப்பால், உடலை குறைத்து பழைய சிம்புப்போல் மாறினார். அவர் உடலை குறைத்தப் பிறகு, படங்கள் அவ்வளவாக நடிக்கவில்லை. ஆகையால், தக் லைஃப் படத்தில் அவரின் லுக் மிரட்டலாக இருக்கும் என்றே ரசிகர்கள் கணித்தனர். மணிரத்னம் இப்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை டெல்லியில் நடத்தி வருகிறார்.

கமல், சிம்பு, அபிராமி ஆகியோர் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இணைந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. சிம்பு அந்தப் புகைப்படத்தில் சாய்ந்து நிற்பது போல ஸ்டைலிஷ் லுக்குடன் இருக்கிறார். இது சிம்பு ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இதனையடுத்து Sigma Thug Rules அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், இது STR பற்றிய அப்டேட் என்பது தெரியவருகிறது.

logo
Kalki Online
kalkionline.com