‘கொரோனா குமார்’ படத்திலிருந்து சிம்பு விலகல்?

‘கொரோனா குமார்’ படத்திலிருந்து சிம்பு விலகல்?
Updated on

மீபத்தில் வெளிவந்த, ‘லவ்டுடே’ படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘கோமாளி’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. இதற்கு முன்பு மற்றொரு இயக்குநரின் படத்தில் ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டு வந்தார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த நிலையில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, அன்பிற்கினியாள், ஜுங்கா போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுல், நடிகர் சிம்புவுக்காக ஒரு கதையை எழுதி அதற்கு, ‘கொரோனா குமார்’ எனவும் பெயர் வைத்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. இந்தப் படத்தில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்து, கால்ஷீட் ஒப்பந்தமும் போட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் சிம்பு ’கொரோனா குமார்’ படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் கோகுல் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டதாகவும் அவரும் அந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு பதில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்தப் படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனுக்கு இயக்குநர் கோகுல் சொல்லி இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com