சிங் கீதம் விமர்சனம்: 94 வயதில் மீண்டும் ஒரு மியூசிகல் மேஜிக் செய்த சிங்கீதம் சீனிவாச ராவ்!

Sing Geetham | சிங் கீதம்
Sing Geetham | சிங் கீதம்
Updated on
ரேட்டிங்(3.5 / 5)

தனது முதல் தமிழ்ப் படமான திக்கற்ற பார்வதிக்கு (1974) சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருது வாங்கினார். கமலின் 100வது படமான ராஜபார்வை (1981) இவர் இயக்கிய இரண்டாம் தமிழ்ப்படம். அபூர்வசகோதரர்கள் (1989) பாக்ஸ் ஆபீசில் மெகா ஹிட் அடித்தது இவரது மூன்றாவது தமிழ்ப்படம். மைக்கேல் மதனகாமராஜன் (1990) கிளாசிக் காமெடி ஹிட் இவரது நான்காவது தமிழ்ப்படம். மகளிர் மட்டும் (1994) இவரது ஐந்தாவது படம். தொடர்ந்து கமலுடனேயே நான்கு ஹிட்ஸ் கொடுத்தவர் பிரபுவுடன் இணைந்து சின்ன வாத்தியார் (1995) கொடுத்தார். காதலா காதலா (1998) கமல் + பிரபு தேவா காம்போ காமெடிப் படம். லிட்டில் ஜான் (2001), மும்பை எக்ஸ்பிரஸ் (2005) இந்த இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை.

வசனங்களே இல்லாமல் வெளியான புஷ்பக் (1987) தமிழில் பேசும் படம் என்ற டைட்டிலில் வந்தது.

வித்தியாசமான சப்ஜெக்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு அதில் காமெடியைக் கலந்து கொடுப்பதில் சிங்கீதம் சீனிவாசராவ் ஒரு விற்பன்னர். இவருக்கு இப்போது 94 வயது ஆகிறது. இந்த வயதிலும் அப்டேட்டாக இருந்து ஒரு பேண்ட்டசி காமெடி டிராமா எடுத்திருக்கிறார். அது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

Singeetam Srinivasa Rao | சிங் கீதம்
Singeetam Srinivasa Rao | சிங் கீதம்

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு சில்லறைத்திருடன். ஒரு சின்ன பெட்டி கேசில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு ரிலீஸ் ஆகி வெளியே வருகிறான். தனது பூர்வீக சொத்து குபேரபுரம் என்ற ஊரில் இருப்பதை அறிந்து அதை விற்றுக் காசாக்கி விடலாம் என அங்கே போகிறான்.

ஊருக்கு வந்தபின் தான் அது ஒரு பொட்டல் காடு என்பது தெரிய வருகிறது. ஒரே ஒரு பெரிய பாரம்பரியம் மிக்க மரம் ஒன்று இருக்கிறது. அதை தனது சொந்த அம்மா போல் பாதுகாத்து வருகிறார் இயற்கை ஆர்வலரான கவுரி என்ற பெண்.

நாயகி பெயர் ரேணு. இவர் ஒரு தங்க சுரங்கத்தின் நிர்வாகி. பாரீனருடன் சேர்ந்து இன்னொரு தங்க சுரங்கத்தை விற்க ஏற்பாடு செய்யும்போது அதற்கு நாயகனின் கையெழுத்துத் தேவைப்படுகிறது. நாயகன், நாயகி இருவரும் இணைந்து தங்க சுரங்கத்தை விற்க முயல்கின்றனர். சுரஙகத்தைத் தோண்டும் முன் அந்த மரத்தை வெட்ட வேண்டும். ஆனால் கவுரி அந்த மரத்தை வெட்ட சம்மதிக்க வில்லை.

மீறி வெட்டும்போது கவுரி கடவுளிடம் வேண்டுகிறார். அப்போது ஒரு குகைக்குள் விழுந்து விடுகிறார். ஊர் மக்களுக்கு சாபம் கொடுக்கிறார். அது பலிக்கிறது. அதாவது ஊர் மக்கள் இனி வாய் திறந்து வசனமாக எதுவும் பேச முடியாது. பாடலாகத்தான் வாயில் வரும். இந்த வித்தியாசமான சாபத்தில் இருந்து ஊர் மக்கள் எப்படி விடுபட்டனர்? அந்த தங்க சுரங்கம் என்ன ஆனது?என்பது மீதித் திரைக்கதை.

நாயகனாக அயான் நடித்துள்ளார். நல்ல கிராமிய முகம். நடிப்பும் கச்சிதம்.

நாயகிகளாக அஹில்யா, ஷாலினி இருவரின் நடிப்பும் பாந்தம். குறிப்பாக கவுரி கேரக்டரில் வரும் அஹில்யா இயல்பான நடிப்பு. புதுமுகம் போலவே தெரியவில்லை.

ஷாலினி நெகடிவ் கேரக்டரில் மிளிர்கிறார். அவர் போக துளசி, சிவநாராயணா, பார்பர் ஆக வருபவர், பூசாரி, டாக்டர், சின்னப்பசங்க என அனைவரும் மனதில் தங்கி விடுகிறார்கள். யதார்த்தமான நடிப்பு.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை அருமை. மெலோடி சாங்க்ஸ் கலக்கல் ரகம். பின்னணி இசையும் அருமை.

அன்குரின் ஒளிப்பதிவு பிரமாதம். பாரதி ராஜாவின் கருத்தம்மா கிராமம் போல வறண்ட நிலப்பரப்பின் அழகைக் காட்டிய விதம் அருமை.

படத்தின் ரன்னிங்க் டைம் 137 நிமிடங்கள்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சிங்கீதம் சீனிவாசராவ்.

இதையும் படியுங்கள்:
மூன்றாம் கண் விமர்சனம்: மிரட்டும் 'ஹைப்பர் லிங்க்' திரில்லர் படம்!
Sing Geetham | சிங் கீதம்

சபாஷ் டைரக்டர்

  • முதல் அரை மணி நேரம் தான் படத்தில் வசனம் இருக்கும். மீதி எல்லாம் பாடல்கள் தான். சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் நினைவும், வாயை மூடிப்பேசவும் படத்தையும் நினைவடுத்துகிறது. வித்தியாசமான முயற்சி.

  • குழந்தைகளும், பெரியவர்களும் ரசிக்கும்படி குபேரபுரம் என்ற ஊரை செட் செய்து எமோஷனல் கனெக்ட் அளித்த விதம்.

  • கடவுள் நம்பிக்கையை வைத்து ஒரு கிண்டலான சீக்வன்ஸ் அமைத்த விதம் அருமை.

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

ஊர் மக்களால் பேச முடியாத ஒரு நிலை வரும்போது ஏன் யாருமே ஊரை விட்டுப்போக முயலவில்லை?

படத்தின் மையக்கரு 1964ல் வெளியான The umbrellas of Cherbourg படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டைட்டிலில் அதற்கான க்ரெடிட்ஸ் தரப்படவில்லை.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான, பிரமாதமான, மியூடிக்கல் ரூரல் காமெடி டிராமா பார்க்க நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம். ஆங்கில சப் டைட்டில் உண்டு.

logo
Kalki Online
kalkionline.com