திடீரென காது கேட்காமல் போனதால் பிரபல பாடகி அதிர்ச்சி... வைரலாகும் போஸ்ட்!

Alka Yagnik
Alka Yagnik

பிரபல பாடகி அல்கா யாக்னிக் திடீரென தனது செவித்திறனை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி பாடகியான அல்கா யாக்னிக், தனது தனித்துவமான குரலுக்கு பெயர் போனவர். குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடியிருக்கும் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. 1100க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார்.

இந்தியில், 80 மற்றும் 90-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்படபல சூப்பர் பாடல்களை பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’யில்‘கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: லாந்தர் - வெளிச்சம் குறைவு!
Alka Yagnik

இப்படி எண்ணற்ற பாடல்களை பாடி பெயர் பெற்ற இவருக்கு திடீரென ஒரு பிரச்சனை வந்துள்ளது. அதாவது, தனது செவித்திறனை இழந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தேன், அப்போது என்னால் எதையுமே கேட்க முடியவில்லை, என் காதில் ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்த நான், மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக சென்றேன். அப்போது பல கட்ட பரிசோதனைக்கு பின் ,எனக்கு நரம்பு வலி செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இந்த செவித்திறன் குறைபாடு ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடியவை, எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஒருபோது நான் நினைத்ததில்லை. இதில் இருந்து நான் குணமாக எனக்காக பிராத்தனை செய்துகொள்ளுங்கள். அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் அதிகப்படியான சத்தத்தை வைத்துக்கொண்டு ஹெட்போனில் பாட்டு கேட்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் நடிகைக்கு கமெண்டில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com