GOAT Movie
GOAT Movie

GOAT படத்தில் கேப்டனை போல மற்றொரு பிரபலம்... யார் தெரியுமா?

Published on

கோட் படத்தில் கேப்டனை போலவே மற்றொரு பிரபலமும் ஏஐ மூலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

தி கோட் திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக பொங்கல், தீபாவளி, விஜய்யின் பிறந்தநாள் என விஜய் படங்கள் ரிலீசாகும் என்பதால் ஜூன் 22 பிறந்தநாளையொட்டி ஜூன் மாதம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படம்... டைட்டில் என்ன தெரியுமா?
GOAT Movie

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இயக்குனர் வெங்கட் பிரபு அண்மையில் மறைந்த தனது தங்கை பவதாரணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய குரலை AI தொழில்நுட்பத்தின் வழியாக இந்த திரைப்படத்தில் பயன்படுத்த உள்ளதாக சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே விஜயகாந்த் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், தற்போது பவதாரிணியின் இணைப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com