GOAT படத்தில் பவதாரிணிக்கு மீண்டும் உயிர் கொடுத்த கிருஷ்ண சேத்தன்... நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

Bhavatharini
Bhavatharini
Published on

கோட் படத்தில் தங்கை பவதாரிணியை மீண்டும் உயிர்பிக்க செய்த யுவன் சங்கர் ராஜாவுக்கும், கிருஷ்ணா சேத்தனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

தி கோட் திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இயக்குனர் வெங்கட் பிரபு அண்மையில் மறைந்த தனது தங்கை பவதாரணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய குரலை AI தொழில்நுட்பத்தின் வழியாக இந்த திரைப்படத்தில் பயன்படுத்த உள்ளதாக கூறப்பட்டது.

அதன் படி நேற்று வெளியான கோட் பட 2வது பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலை நடிகர் விஜய் பாட, லேடி வெர்ஷனுக்கு மறைந்த பாடகி பவதாரிணி குரல் பொருத்தப்பட்டுள்ளது. அவர் நேரடியாக பாடுவது போன்று அப்படியே இருப்பதால் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார். இந்த சாதனையை புரிந்தவர் கிருஷ்ண சேத்தன் ஆவார். இதே போன்று தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அன்றும், இன்றும் சினிமா..!
Bhavatharini

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், "பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்," என்று கூறியுள்ளார்.

இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தனது தங்கை குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவளின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை என குமுறி இருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com