சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அதர்வா ஆகியோர் நடிக்கும் படம் புறநானூறு இல்லை, அப்படத்திற்கு வேறு பெயர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் விமர்சன ரீதியாக மக்களின் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்தப் படம் பல தேசிய விருதுகளையும் வென்றது. இதனையடுத்து சுதா, சூர்யா வெற்றிக்கூட்டணி விரைவில் மீண்டும் இணையும் என்று சென்ற வருடம் அறிவிப்பு வெளியானது. அதில் சூர்யா, நஸ்ரியா மற்றும் துல்கர் ஷர்மா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இப்படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் முதலில் படப்பிடிப்பு தேதி தள்ளிப்போனது. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகியதாக செய்திகள் வந்தன. இதன்தொடர்ச்சியாக நஸ்ரியா மற்றும் துல்கர் ஷர்மா ஆகியோரும் விலகினர்.
இவர்களுக்கு பதிலாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலிலா ஆகியோர் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் லோகேஷ் கனகராஜும் இணைவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர் இப்போது கூலி படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை பெரிய அளவில் நடைபெற்றது. இந்த பூஜையில் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, அதர்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த பூஜை வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ மூலம் இது 19ம் காலக்கட்டத்து படம் என்பது தெரியவந்துள்ளது. அந்த காலத்தில் வெளியான படங்களின் ஸ்டைல் போல் இருந்தது.
அந்தவகையில் தற்போது படத்தின் பெயர் புறநானூறு இல்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. SK25 படத்திற்கு அது தலைப்பு இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றே சொல்லப்படுகிறது.