* உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
* இரவை கண்டு பயமே ஏற்படாத அளவுக்கு நட்சத்திரங்களை ரசிக்கிறேன்.
* மதங்கள் சொர்க்கத்திற்கான வழிகளை சொல்கின்றனவே தவிர, சொர்க்கம் எங்கே இருக்கிறது என்பதை காட்டுவதில்லை.
* நான் ஒருபோதும் அறிவிலிகளை சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எனக்கு எதுவுமில்லை.
* விஞ்ஞான கேள்விகளுக்கு ஆயிரம் பேர் சேர்ந்து அளிக்கும் பதில்கள் அதிகாரபூர்வமானவை அல்ல. மாறாக, ஆதாரங்களுடன் தகுந்த காரணங்களுடன் ஒருவர் அளிக்கும் பதில்கள் மட்டுமே உண்மையானது.
* அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே. ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே.
* உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
* அளவிடக்கூடியதை அளவிடுங்கள். அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.
* கணிதம் என்பது கடவுள் பிரபஞ்சத்தை எழுதிய மொழி. அறிவியலின் சாவியும் கதவும் கணிதம்தான். இயற்கை எனும் புத்தகம் கணித மொழியில் எழுதப்பட்டுள்ளது.
* நீங்கள் இரவைப் போல இருட்டான இடத்திலிருந்து பூமி ஒளிர்வதைக் காண முடிந்தால் அது உங்களுக்கு சந்திரனை விட அற்புதமான தாக்கம் காட்சியளிக்கும்.
* நான் மீண்டும் எனது ஆய்வுகளை ஆரம்பத்திலிருந்து தொடங்கினால் நான் பிளேட்டோவின் ஆலோசனையைப் பின்பற்றி கடிதத்துடன் தொடங்க வேண்டும்.
* எல்லா உண்மைகளையும் அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் புரிந்து கொள்வது எளிமையானது. அவற்றைக் கண்டுபிடிப்பதே முக்கியமான விஷயம்.
* இயற்கையின் விதிகள் கடவுளின் கையால் கணித மொழியில் எழுதப்பட்டுள்ளன.