என்னது!! சூர்யவம்சம் 2வில் சிவகார்த்திகேயனா! இது நல்லாருக்கே!

Suryavamsam
Suryavamsam
Published on

சூர்யவம்சம் 2 படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்தான செய்திகள் வெளியாகியுள்ளன.

1997 ஆம் ஆண்டு வெளிவந்த "சூர்யவம்சம்" திரைப்படம், தமிழ் திரையுலகில் ஒரு அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், ஆர். சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம், குடும்ப உறவுகளின் ஆழத்தையும், ஒரு தனிமனிதனின் வளர்ச்சியையும் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியது.

திரைக்கதை சுருக்கம்:

கதை, கிராமத் தலைவரான சக்திவேல் கவுண்டரின் குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. இளைய மகன் சின்னராசு பொறுப்பற்றவனாக இருக்கிறான். சக்திவேல் கவுண்டருக்கு சின்னராசுவின் நடத்தையில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், சின்னராசு தனது உறவுக்காரப் பெண்ணான கௌரியை மணக்க மறுக்கிறான். எதிர்பாராத விதமாக, சின்னராசு நந்தினியைச் சந்திக்கிறான். நந்தினி அவனது வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வருகிறாள். இவர்களது காதல், குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், சின்னராசுவின் வளர்ச்சி எனப் படம் முழுவதும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் விரவிக் கிடக்கின்றன.

சூர்யவம்சம்" திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சகர்களிடமிருந்தும் படத்திற்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஆர். சரத்குமாருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. மேலும், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் (விக்ரமன்), சிறந்த நடிகை (தேவயானி) உட்பட பல தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் இப்படம் வென்றது. உணர்வுப்பூர்வமான கதை, நடிகர்களின் நடிப்பு, மற்றும் இனிமையான இசை ஆகியவை இப்படத்தின் சிறப்பம்சங்களாகும்.

இதுதொடர்பான சில அறிவிப்புகளையும் நடிகை தேவையானியின் கணவரும், அப்படத்தின் இயக்குனருமான ராஜ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து விக்ரமன் சார் தான் முடிவெடுப்பார். சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கலாம் என்ற ஒரு ஆலோசனை இருப்பதாகவும், அதிலும் சரத்குமார் மற்றும் தேவையானி, நடிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

தற்போது சிவாகார்த்திகேயன் முன்னணி நடிகரில் ஒருவராக இருப்பதால் அவர் இந்த கதைக்கு பொருத்தமானவரா என்பது பற்றி ஆலோசித்து வருவதாக  இயக்குனர் ராஜ்குமார்  செய்தியாளர்கள்  சந்திப்பில்  பேசினார்.

இதையும் படியுங்கள்:
பெங்களூர் ஸ்டைல் மண்டக்கி ரெசிபி - ஈவினிங் ஸ்நாக்ஸ்!
Suryavamsam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com