தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு மாறியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பெரிய ஹிட்டானது. இதனால், சிவகார்த்திகேயனுக்கு படவாய்ப்புகள் குவிகிறது. அதனால் அவரது சம்பளமும் கூடிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்தவகையில் அவர் தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் "மதராஸி" மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் "பராசக்தி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "மதராஸி" திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும், வெங்கட் பிரபுவுடன் இணையும் படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில், கோடிகளில் சம்பாதிக்கும் ஒரு நடிகர் ஏன் திடீரென வாடகை வீட்டிற்கு மாற வேண்டும் என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஏனெனில், சினிமா உலகில் படிப்படியாக உயர்ந்து, தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின உழைப்பால் பல கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் ஒரு பிரமாண்டமான வீட்டை கட்டி வசித்து வந்தார். இந்நிலையில், அவர் திடீரென வாடகை வீட்டிற்கு மாறியதுதான் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்களை கிளப்பியுள்ளது.
சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, சிவகார்த்திகேயனின் பழைய வீடு சில மாற்றங்களைச் செய்ய அல்லது முழுமையாக இடித்துவிட்டு புதிய வீடு கட்டும் பணிகளுக்காக அவர் தற்காலிகமாக வாடகை வீட்டிற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது தற்போதைய தேவைக்கு ஏற்ப, சில வசதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வீடு தேவைப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் வாடகை வீட்டை தேர்ந்தெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இந்த மாற்றம் குறித்த உண்மை நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், ஒரு பெரிய நட்சத்திரம் தனது சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு மாறியது, அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.