நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ள தாய்க்கிழவி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முனிஷ்காந்த், பால சரவணன் , இளவரசு , சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த காடுபட்டி எனும் குக்கிராமத்தில் வாழும் வயதான மூதாட்டி , மற்றும் அவரை சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுவாரசியமான கதையைக் கொண்டது தாய்க்கிழவி திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளதால் , ஏற்கனவே படத்திற்கு பாசிட்டிவ் வைப்ஸ் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த விமர்சகர்கள் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே செய்துள்ளனர்.
இன்று பட வெளியீட்டை முன்னிட்டு சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.,"இந்த திரைப்படம் அனைவரையும் கவரக்கூடிய வகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு காட்சி மதுரையில் திரையிடப்பட்டுள்ளது , திரைப்படத்தின் இயக்குனர் மதுரை மண்ணை சார்ந்தவர், அவரை மதுரையின் மகன், நான் இந்த மண்ணின் மருமகன்.இந்த திரைப்படத்தை மதுரையில் பார்க்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் வந்துள்ளோம் , படம் ரொம்ப சூப்பராக இருக்கிறது. படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகள் கூட ரசிகர்களை சிரிக்க வைக்கிறது , நல்ல எமோஷன் காட்சிகளும் உள்ளது" என்று கூறினார்.
ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வாய்ப்பு ,இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ளது. இந்த மாதிரி திரைப்படங்கள் மக்களிடம் பெரிதாக போய் சேர்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை பார்க்க வேண்டும். இந்த திரைப்படம் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் , நீங்கள் இதை இன்னும் பலரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்த திரைப்படம் அனைவருக்கும் திருப்தியாக இருப்பதாக கூறுகின்றனர் உங்களது பாராட்டு தான் எனக்கு திருப்தியாக இருக்கிறது. என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
தாய் கிழவி என்று எதற்காக பெயர் வைத்தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்
அதற்கு சிவகார்த்திகேயன் "தாய்க் கிழவி என்பது ஆதிப் பெண்ணினத்தை குறிக்கும் , ஒரு வீட்டிற்கு ஒரு பெண் எவ்வளவு முக்கியம் , அவர்கள் தெய்வத்திற்கு சமமாக அந்த குடும்பத்தையே நிலை நிறுத்துகிறார்கள் என்பதற்காக தான் தாய் கிழவி என்ற பெயரை வைத்துள்ளோம்" என்று கூறினார்.
ஒவ்வொரு படத்திலும் இடையூறு வருகிறது இடையூறு வருகிறது என்று கூறுகிறீர்கள்? யார் தான் உங்களுக்கு இடையூறு கொடுப்பது? என்ன மாதிரி இடையூறு கொடுக்கிறார்கள்? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்
இதை எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் அது யாருன்னு சொல்லுப்பா என்று? அது யார் என்று சொன்னால் யூட்யூப் சேனல்களுக்கு தான் வியூ கிடைக்கும். இதை சொல்றதுக்கு காரணம், நான் இன்னொருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, இதையெல்லாம் தாண்டி , இது போன்ற கேள்வி வரும் போது அதை சொல்லாமல் தவிர்வதும் ஈசி தான். இவ்வளவு தடைகளை தாண்டி , ராதிகா மேடம் எல்லாம் அவரது ஜெனரேஷன்களை தாண்டி 48 வருடம் இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து உள்ளார்கள்.
இது எல்லாருக்குமே இருக்கும் உங்களுக்கும் இருக்கும். இதை மேடையில் சொல்வதற்கான காரணம் என்னவென்றால்? என்னை பிடித்தவர்களுக்கு "நீங்கள் இருப்பதினால் தான் நான் தைரியமாக இதை கடந்து வர முடிகிறது" என்பதை சொல்வதற்காக தான். யாரையும் குறை சொல்வதற்காக அல்ல. இங்கு இவ்வளவு மைக் இருக்கிறது , அழகாக 4,5 பெயரை சொல்லிவிட்டு அதை தலைப்பு செய்திகளாகி விட்டு போகலாம். இது அதற்கான காரணம் அல்ல, என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
எந்தவிதமான இடையூறு செய்கிறார்கள்? என்று மீண்டும் கேட்கப்பட்டது.
அதற்கு சிவகார்த்திகேயன் "கம்ப்ளைன்ட் செய்வதற்காக நான் வரவில்லை, இப்படி ஒரு சூழல் இருக்கிறது.இதை கடந்துதான் வருகிறேன் , இதை எங்கேயோ பார்ப்பவர்களுக்கு , இது எல்லாருக்கும் இருக்கிறதா? அவர்கள் கடப்பதை போல நாமும் கடந்து போகலாம் , என்ற எண்ணம் வரும். என்னை ரசிப்பவர்கள் நாலு பேருக்கு இந்த பாஸிட்டிவ் எண்ணம் வந்தால் போதும்.
எவ்வளவு பேருக்கு நம்மை பிடிக்கிறது. உள்ளே 500 பேர் திரைப்படம் பார்த்தாலும் அதில் 400 பேருக்கு இந்த படம் பிடித்து விட்டால் பிளாக்பஸ்டர் தான். 500 பேருக்கும் பிடிக்க வைக்க முடியாது, அது பெரிய விஷயம் , அதற்கு தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்." அடுத்ததாக இதே இயக்குனர் இயக்கத்தில் மதுரை மண் சார்ந்த சேயோன் படத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.