அடுத்தடுத்து பட்டியலை அடுக்கி வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்.. நெக்ஸ்ட் படம் இதுதான்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Updated on

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் என்பதால் பொங்கலுக்கு நன்றாக கல்லா கட்டியது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படம் வெளியாகும்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். எஸ்கே 21 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படம் வெளியாகவுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த வருடமே வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு படமெடுக்கும் முருகதாஸிற்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குரும், . இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

logo
Kalki Online
kalkionline.com