செல்ல மகனுக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன சிவகார்த்திகேயன்..!

Sivakarthikeyan son
Sivakarthikeyan son

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நடிகர் சிவகார்த்திகேயன், தனது மகன் குகன் தாஸின் 3-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கியூட் புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜேவாக இருந்து படிப்படியாக முன்னேறி உச்சநடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது 3வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சீக்கிரமே 3வது குழந்தைக்கு அப்பாவாக போகிறார் என வாழ்த்த ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜூன் 2ம் தேதி அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே முதல் குழந்தை ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பாடி பிரபலமானது. தொடர்ந்து 2வது மகனான குகனும் அயலான் பட ஆடியோ லாஞ்சில் மேடையில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். தற்போது அவருக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான 'அயலான்' திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ஏனோ எதிர்பார்த்த அளவுக்கு பெறவில்லை. மேலும் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக, தன்னுடைய சம்பளப்பணமே வேண்டாம் என சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் தோல்வியை தழுவினாலும், இவர் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. காரணம் இப்படம் சென்னையை சேர்ந்த இராணுவ அதிகாரி Major Mukund Varadarajan வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்./

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: இந்தியன் 2 - மாஸ் & கிளாஸ்! இந்தியன் 3, எப்போ ஷங்கர் சார்?
Sivakarthikeyan son

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகன் குகன் தாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள கியூட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஹாப்பி பர்த்டே குகன் லவ் யூ என கேப்ஷன் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com