ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்ஷனில், ‘மதராஸி’ விரைவில்...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Sivakarthikeyan A.R. Murugadoss
Sivakarthikeyan A.R. Murugadossimg credit - imdb.com, fulloncinema.in
Published on

ஸ்ரீலட்சுமி மூவிஸ் சார்பில் என்.ஸ்ரீலட்சுமி பிரசாத் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள புதிய படம், ‘மதராஸி’. இதில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனுக்கு 23-வது படமாகும். ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிஜூ மேனன், வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த், பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், கெவின் குமார் சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் இந்த படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்றும் இந்தியில் 'தில் மதராஸி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இந்த பெயரை வைத்ததற்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் `மதராஸி' படத்தின் கதை. வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் வார்த்தைதான் `மதராஸி'. அதனால்தான் இப்படத்திற்கு `மதராஸி' என பெயர் வைக்கப்பட்டது" என்றார்.

இதையும் படியுங்கள்:
ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. பூஜையுடன் தொடக்கம்.. ஹீரோயின் யார் தெரியுமா?
Sivakarthikeyan A.R. Murugadoss

மேலும், "ஜாலியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் சிவகார்த்திகேயனை, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ‘மதராஸி’ படத்தில் காட்டியுள்ளோம். இந்த படத்தில் அவரது நடிப்பு நிச்சயமாக பேசப்படும். அமரன் படத்துக்கு பிறகு அரவது கெரியரில் நின்று பேசும் படமாக ‘மதராஸி’ நிச்சயம் இருக்கும்.

அதேபோல் கன்னடம், இந்தி, தெலுங்கில் ஜொலித்த ருக்மினி வசந்த் தமிழில் இந்த படத்தில் மூலமாக அறிமுகமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் ருக்மினி வசந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். பிஜூ மேனன், வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த், பிரேம்குமார் உள்பட அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த படத்துக்கு சுதீப் எல்மோன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிரூத் இசையமைக்கிறார். இந்த இருவருமே படத்தின் முகுகெலும்பு எனலாம். இருவருமே அட்டகாசமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இப்படி எல்லோருமே திறமையானவர்களாக கிடைத்திருப்பதால் படம் எதிர்பார்ப்புக்கு மேலாகவே சிறப்பாக தயாராகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் கள படம். பல திருப்பங்களையும், விறுவிறுப்புகளையும் உள்ளடக்கியதாக படத்தை எடுத்து வருகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இந்த படம் இருக்கும். நல்ல படங்களுக்கு என்றுமே ஆதரவு தரும் ரசிகர்கள் இந்த படத்தை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். வருகிற செப்டம்பர் மாதம் 5-ம்தேதி படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்," என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் லுக் இதுதான்... வைரலாகும் ஷூட்டிங் போட்டோ!
Sivakarthikeyan A.R. Murugadoss

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com