ஆஸ்கார் தகுதி தேர்வுக்கு ஆறு தமிழ் திரைப்படங்கள் - ஒன்றும் தேறவில்லை!

Oscar Award
Oscar Award
Published on

திரையுலகில் கால் தடம் பதித்து பிரபலமான ஒவ்வொருவரின் கனவும் ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்பதுதான். ஆனால் நம்மைப் பொறுத்தவரை திரைப்படத்தை ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைத்தாலே அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறோம்.

ஏனெனில் ஆஸ்கார் தேர்வு குழு என்பது பல கடினமான விதிகளை கொண்டதாக உள்ளது. அந்த விதிகள் அமெரிக்கா உட்பட வெளிநாட்டை சேர்ந்த சினிமாக்களுக்கு உதவும் படியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நம்மைப் போன்ற நாட்டில் எடுக்கும் திரைப்படங்கள் பிற நாட்டுத் திரைப்படங்கள் குறிப்பாக ஈரான் உள்ளிட்ட சில நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களின் தரத்தை எட்டிப் பிடிக்க கடும் போட்டி போட வேண்டியுள்ளது. இது தவிர உள்நாட்டிலும் சில அரசியல்கள் செய்யப்படுகின்றன. அதனாலேயே பல நல்ல தமிழ் திரைப்படங்கள் குறைந்தபட்சம் தமிழ் நாட்டுக்குள்ளும், அதிகபட்சமாக பான் இந்தியா திரைப்படமாகவே முடிந்து போய் விடுகின்றன. இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என தெரியவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டின் ஆஸ்கார் விருது பரிந்துரைக்காக ஆறு தமிழ் படங்கள் உட்பட இந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட 29 படங்கள் போட்டி போட்டன.

அதில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்:

'மகாராஜா' நடிகர் விஜய் சேதுபதி ஐம்பதாவது படம். நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார்.

'கொட்டுக்காளி' நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி நடிப்பில் வெளியானது வி எஸ் வினோத் ராஜ் இயக்கிய இப்படம். தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னரே பல விருதுகளை குவித்தது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடித்திருந்தனர். இயக்கம், திரைக்கதை, நடிப்பு, இசை என அனைத்துக்காகவும் பாராட்டப்பட்டது.

'வாழை' இயக்குனர் மாரி செல்வராஜ் தன் இளமைக்கால வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த இந்த படம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்தது நிகிலா விமல் கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வரவேற்பு பெற்றது.

'தங்கலான்' பா. ரஞ்சித் இயக்கி வெளியான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை குவித்தது. பா. ரஞ்சித் இயக்கம், நடிகர் விக்ரம் நடிப்பு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அனைவராலும் பாராட்டப்பட்டன.

'ஜமா' இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்த படம். சேத்தன், அம்மு அபிராமி என பலர் நடித்திருந்தனர் இசை இளையராஜா. நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படம் வரவேற்பு பெற்றது.

இதையும் படியுங்கள்:
நம்மோடு சிறுகச் சிறுக இணைந்து விட்ட சின்னத்திரை! ஆனால்..!
Oscar Award

இந்தி படம் தேர்வு; ஆனால் முடிவில் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் 'லாபட்டா லேடிஸ்' (தொலைந்து போன பெண்கள்) என்ற இந்தி படம் ஆகும். படத்தை நடிகர் அமீர்கான் மனைவி கிரண் ராவ் இயக்க, அமீர்கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரித்திருந்தனர். நிதன்சி கோயல், ஸ்ரீ வஸ்தவா, பிரதீபா ரண்டா துபே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறித்து இந்திய கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டாரக்கரா கூறியது; "இந்த படம் இந்திய பண்பாட்டை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுதந்திரம், சுய வேலைவாய்ப்புகளை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கின்றது. பெண்கள் மகிழ்ச்சியுடன் வீட்டை கவனித்துக் கொள்பவர்களாகவும் தொழில் முனைவோராகவும் இருக்க விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது" இவ்வாறு அவர் கூறினார். ஆறு தமிழ் படங்கள் பரிந்துரைக்கட்டும், வாய்ப்பு இல்லாமல் போனது கோலிவுட்டுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com