தெலுங்குப் படங்களில் எஸ்.ஜே. சூர்யா… நடிப்பு அரக்கனின் அடுத்தக்கட்ட மூவ்!

S.J. Surya
S.J. Surya

எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பினால் தமிழ் இயக்குனர்களின் விருப்பமான நடிகராக இருந்து வருகிறார். இப்போது கோலிவுட்டில் வெளியாகும் முக்கால் வாசிப் படங்களில் இவர்தான் வில்லனாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா தெலுங்குப் படங்களிலும் நடிக்கப்போவது அதிகாரப்பூர்வமானது.

எஸ்.ஜே.சூர்யா வாலி, குஷி, நானி, நியூ போன்றத் திரைப்படங்களை இயக்கினார். பிற்பாடு முழுநேரமும் நடிப்பில் குதித்த இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 போன்றப் படங்களில் இவரின் நடிப்பு தமிழக ரசிகர்களால் மிகவும் பேசப்பட்டது. இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா தனுஷுடன் ராயன் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் பாகம் 2 மற்றும் 3 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் போன்றப் பிரபல நடிகர்கள் நிறைய பேர் நடிக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கியமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இரண்டாம் பாகம் மட்டுமே வெளியாகும் என்றுக் கூறியிருந்த நிலையில் படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு இரண்டு மற்றும் மூன்று பாகங்களாகப் பிரித்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனையடுத்து அவரின் அசுரத்தனமான நடிப்பைப் பார்த்து மிரண்டுப்போன இயக்குனர் ஷங்கர், அவர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் நடிக்க அழைப்பு விடுத்தார். ஷங்கர் ஒருபுறம் தமிழில் இந்தியன் படங்களை இயக்கி வருகிறார். மறுபுறம் தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகையால் அதில் சிலக் காட்சிகளில் மட்டும் எஸ்.ஜே.சூர்யாவை நடித்துக்கொடுக்கும்படி ஷங்கர் கேட்டுக்கொண்டார். சூர்யாவும் ஒப்புக்கொண்ட நிலையில் தெலுங்கு சினிமாவில் மீண்டும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்னர் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ஸ்பைடர் படத்தில் நடித்தார். அதேபோல் குஷி, நானி, புலி ஆகிய படங்களைத் தெலுங்கில் இயக்கினார்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 Motivational தமிழ்த் திரைப்படங்களைப் பாருங்கள்.. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்!
S.J. Surya

மேலும் நானி நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் 'சரிபோதா சனிவாரம்' படத்திலும் நடிக்கவுள்ளார். இதனால் இவரின் அடுத்தடுத்த இரண்டுப் படங்கள் தெலுங்கில் வெளியாகவுள்ளன. ஆகையால் தெலுங்கு சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா மாஸ் கம்பேக் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com