இந்த 5 Motivational தமிழ்த் திரைப்படங்களைப் பாருங்கள்.. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்!

 Motivational Movies in Tamil
Motivational Movies in Tamil

பொதுவாகவே திரைப்படங்கள் நம் இதயங்களைத் தொட்டு, உணர்ச்சிகளைத் தூண்டி வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன. குறிப்பாக சில ஊக்கமூட்டும் திரைப்படங்களை நாம் பார்ப்பது மூலமாக, நம்மை மேம்படுத்துவதற்கான உந்துதல் நமக்குக் கிடைக்கிறது. அந்த வகையில் சிறந்த ஊக்கமூட்டும் ஐந்து தமிழ்த் திரைப்படங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

1. முகவரி: இயக்குனர் V.Z துரை இயக்கத்தில் வெளியான ‘முகவரி’ திரைப்படம், தனது வெற்றிப் பயணத்தில் எண்ணற்ற பின்னடைவுகளையும் சவால்களையும் சந்திக்கும் ஒரு  இசைக்கலைஞனின் வாழ்க்கையை அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டிய தமிழ் திரைப்படமாகும். நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், நமக்குப் பிடித்த விஷயத்தை அடைய மன உறுதியும், விடாமுயற்சியும், என்ன ஆனாலும் நம் கனவுகளைக் கைவிடக்கூடாது என்பதையும் அழகாகப் பதிவு செய்திருப்பார்கள். இலக்குகளை நிர்ணயித்து பயணம் செய்யும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாகும்.

2. அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘அன்பே சிவம்’ என்ற திரைப்படம், இரண்டு மாறுபட்ட நபர்களின் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும்படியாக கதை செல்லும். இத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவரும் கனத்த இதயத்துடன்தான் வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு இரக்கம், பாசம், மனித இயல்பு, அன்பு, மனிதாபிமானம் போன்ற அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களுக்கு கொடுத்திருப்பார் இயக்குனர். அதிலும் கமலஹாசனின் நடிப்பு வேற லெவல். வாழ்க்கையில் அன்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டுமெனில் இத்திரைப்படத்தைப் பாருங்கள். 

3. எதிர்நீச்சல்: இயக்குனர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஒரு பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞன் எப்படி இறுதியில் வெற்றியாலானாக மாறுகிறான் என்பதைச் சுற்றியே இந்தப் படம் நகரும். நகைச்சுவையான ஊக்கமளிக்கும் கதைக்களத்துடன் எதிர்நீச்சல், சுயமுன்னேற்றம், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. குறிப்பாக நாம் நம் மனநிலையை தினமாக வைத்திருந்தால், முடியாதது என்று எதுவுமே இல்லை என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டுகிறது இத்திரைப்படம். 

4. சூரரைப் போற்று: சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹிட் திரைப்படமாகும். மிகப்பெரிய கனவு கண்டு விமானத்துறையில் புரட்சியை ஏற்படுத்தத் துணிந்த ஒரு இளைஞனின் போராட்டம் மற்றும் வெற்றியை இப்படம் உணர்த்துகிறது. திரைப்படத்தின் கதை திரைக்கதை சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே சூப்பராக இருக்கும். இத்திரைப்படம் பார்த்தால், கடின உழைப்பு, மன உறுதி, விடாமுயற்சி தடைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் போன்றவற்றை நீங்கள் உணரலாம். 

இதையும் படியுங்கள்:
Elon Musk: புதுமை நாயகனின் வெற்றிக்கு வித்திட்ட 5 விஷயங்கள்! 
 Motivational Movies in Tamil

5. சிவாஜி: பழம்பெரும் இயக்குனரான சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் என்னைப் பொருத்தவரை ஒரு சிறந்த மோட்டிவேஷன் திரைப்படமாகும். ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் ஊழலுக்கு எதிராக போராடி சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும்படியாக இக்கதை நகரும். இத்திரைப்படம் மூலமாக தனி மனிதன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எனவே சிவாஜி திரைப்படம் மூலமாகவும் நாம் நம் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com