தெலுங்கில் கலக்கும் நடிப்பு அசுரன்... வைரலாகும் மாஸ் வீடியோ!

Sj surya
Sj surya
Published on

நடிப்பு அசுரனாக அறியப்படும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் சரிபோதா சனிவாரம் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா தற்போது படிப்படியாக முன்னேறி நல்ல நடிகர் என்று தாண்டி மாஸான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பேவரைட் இடத்தை பிடித்து விட்டார். மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஸ்பைடர் என பல படங்களில் தனது அட்டகாச நடிப்பால் ரசிகர்களின் மனதை பிடித்துவிட்டார். தற்போது பன்முக கலைஞராகவே மக்களிடம் அறியப்படுகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில் தற்போது சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிப்பு அசுரன், அரக்கன் என்று பெயர் எடுக்கும் அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழை தொடர்ந்து தெலுங்குவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வில்லன் என நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 , தனுஷ் நடித்துள்ள ராயன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , விக்ரம் நடிக்கு வீர தீர சூரன் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட படங்கள் தற்போது எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் தள்ளிப்போகும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி... காரணம் இதுதான்!
Sj surya

இந்நிலையில், தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நானியுடன் ஒரு படத்தில் சூர்யா நடிக்கிறார். நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா மீண்டும் அவருடன் கைகோத்துள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது.

நானி நாயகனாக நடிக்கும் இப்படத்தை விக்ரம் ஆத்ரேயா இயக்குகிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து அதிதி பாலன் , சாய் குமார் , சுபலேகா சுதாகர் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்று எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தில் இருந்து சின்ன வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ். ஜே சூர்யா போலீஸ் லுக்கில் தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனது 56 வயதில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com