கையில் ரம்பம்… சுவற்றில் ரத்தம்… அய்யய்யோ பேயின் சத்தம்! 

Evil Dead
Evil Dead
Published on

ஈவில் டெட் (Evil Dead) என்கிற பெயரைக் கேட்டாலே சிலருக்கு பயத்தில் கை காலெல்லாம் நடுங்கும். அந்த அளவுக்கு உலகெங்கிலும் மிகவும் பிரபலமான திகில் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இது திகில் மற்றும் அமானுஷ்யம் ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தொடர். இந்தத் தொடர் அதன் தனித்துவமான கதாபாத்திரங்கள், பயங்கரமான ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்காக மிகவும் பிரபலமானது. இந்தத் திரைப்படத்தொடர், திகில் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. 

ஈவில் டெட் திரைப்படம் 1979 இல் சூட்டிங் எடுக்கப்பட்டு, 1981 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் ‘சாம் ரேமி’ என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கினார். இந்தத் திரைப்படம் ஒரு நண்பர்கள் குழு காட்டில் கைவிடப்பட்ட ஒரு குடிசையில் தங்கி இருக்கும் போது, அங்கு இருக்கும் பழங்கால புத்தகம் ஒன்றைத் திறந்து விடுகின்றனர். அந்தப் புத்தகம் ஒரு பேயை விடுவித்து விடுகிறது. இதன் பிறகு நிகழும் சம்பவங்கள்தான் இந்தத் திரைப்படத்தின் கதை. 

ஈவில் டெட் திரைப்படம் வெளியானது முதலே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிகமான வருமானத்தை ஈட்டியது. மேலும், இதன் வெற்றிக்குக் காரணம் அதன் தனித்துவமான கதை, வன்முறைக் காட்சிகள் மற்றும் அதிகமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள். இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றது மட்டுமின்றி திகில் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்தது.‌

ஈவில் டெட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தொடர் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.இந்த தொடரில் பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும் முதல் பாகத்தின் வெற்றியை இவை அடையவில்லை என்றாலும், திகில் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன. இந்தத் திரைப்படத் தொடர் திகில் திரைப்படத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இதையும் படியுங்கள்:
பேய் திருமணம்: பேய்க்கும் பேய்க்கும் கல்யாணம், அத ஊரே கோலாகலமா நடத்தி வைக்குது… எங்கே தெரியுமா?
Evil Dead

இதற்கு அடுத்து எடுக்கப்பட்ட பேய் படங்களில் ஈவில் டெட் திரைப்படத்தின் காட்சிகள் கருத்துக்கள் அப்படியே பின்பற்றப்பட்டன. இன்று வரை இந்தத் திரைப்படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. எனக்கும் சிறுவயதில் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனுபவம் உள்ளது. அப்போது டிவியில் பார்க்கும்போது அவ்வளவு பயங்கரமாக இருக்கும். 

அந்த காலத்திலேயே இப்படி ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு பேய் படத்தை எடுத்து வெற்றி கண்டது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான். இன்று இந்தத் திரைப்படத்தை பார்த்தாலும் நிச்சயம் பயப்படாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதுவும் அந்த புத்தகத்தை படித்தவுடன் பேய் வெளியே வரும் காட்சிகள் உண்மையிலேயே குலை நடுங்க வைக்கும். 

டேய் ஓடுடா பேய் வந்துடுச்சு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com