சம்பளம் கூட சிலர் கொடுப்பதில்லை – செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி!

Viijay Sethupathi
Vijay Sethupathi

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி சம்பளத்தை குறித்தும் தயாரிப்பாளர் குறித்தும் பேசியுள்ளார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் துபாயில் நடந்தது. இதில் விஜய் சேதுபதியும் கலந்துக்கொண்டார். புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா கம்பீரமாக மின்னிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதே துபாயில் ஒரு காலத்தில் பாத்ரூம் கழுவும் வேலையை செய்து வந்ததாகவும் விஜய்சேதுபதி உருக்கமாக பேசியிருந்தார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. கடைசியாக அவர் வில்லனாக நடித்தப் படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்தன. அதேபோல், அவரது கதாபாத்திரமும் அதிகளவில் பேசப்பட்டன.

ஒருவேளை வில்லன் கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால்தான், ஹீரோ கதாபாத்திரத்திற்கு வரவேற்பு குறைகிறதோ என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகிறது. இதைதான் விஜய் சேதுபதியும் நினைத்தாரோ என்னவோ? இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என்றும், ஹீரோ கதாப்பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறினார்.

அந்தவகையில் தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ப்ரமோஷன்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. அப்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி எமோஷனலாக பேசியுள்ளார்.

அதாவது, பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்க 200 கோடி, 1000 கோடி வெற்றியை எல்லாம் பார்த்துட்டீங்களே என கேட்டார். அவர் மாஸ்டர், ஜவான் உள்ளிட்ட படங்களை மனதில் வைத்து அந்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, “200 கோடி, 1000 கோடி எல்லாம் நான் பார்க்கலைங்க.

இதையும் படியுங்கள்:
G7 மாநாட்டில் கலந்துக்கொள்ள இத்தாலி சென்ற பிரதமர்… காலிஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்பு!
Viijay Sethupathi

இங்க பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை.” எனக் கூறியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com