"ஆணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய சினிமா"- சந்திரமுகி நடிகை பளார்!

Actress Jothika
Jothika
Published on

இந்திய சினிமாவில் பொதுவாக திரைப்படங்கள் பலவும் ஆண்களை மையப்படுத்திய கதைகளாகவே இருக்கும். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகள் மிக மிக குறைவு. அதிலும் தென்னிந்திய சினிமாக்களில் இதுபோன்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த மனப்பான்மை சினிமாவிலும் ஆணாதிக்கம் இருப்பதைத் தான் உணர்த்துகிறது என சந்திரமுகி பட நடிகை குற்றம் சாட்டியிருக்கிறார்.

பான் இந்தியத் திரைப்படங்களுக்கு விதை போட்டது தொன்னிந்திய சினிமா தான். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் மிகக் குறைவாகவே இருந்த காலத்தில் தான், நயன்தாரா தனக்கென தனிப்பாதையை அமைத்தார். இதன்படி ஹீரோ இல்லாமல், ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நடிக்கத் தொடங்கினார் நயன்தாரா. இதில் நயன்தாராவுக்கு வெற்றியும் கிடைத்தது. இருப்பினும் மற்ற நடிகைகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. ஒரு படம் முழுமை பெற அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியம். ஆனால் இதில் ஹீரோக்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது சரியான பாதை தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமா என்றாலே ஆண்களுக்கான கதைக்களங்களாகத் தான் இருந்துள்ளன. ஒருசில படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஆண்களை விடவும் பெண்களுக்கு சம்பளம் குறைவு தான். ஆண்களுக்கான கதைக்களமாக இருந்தாலும், சில கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைப் பொறுத்து தான், படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கின்றனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ஜோதிகா.

ஜோதிகா படம் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், குறுகிய நாட்களிலேயே மிகவும் பிரபலமாகி விட்டார். இருப்பினும், கதைத் தேர்வில் அதிக அக்கறையைக் காட்டினார். இதனால், தான் நடிக்க வந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பல கதைகளை நிராகரித்தார்.

இதுகுறித்து சமீபத்தில் மனம் திறந்த ஜோதிகா, “தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கிறது. பாலிவுட் சினிமாவில் கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தென்னிந்திய சினிமா இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. இம்மாதிரி படங்களில் நடிகைகள் நடித்தால் அவர்களுடன் டான்ஸ் ஆடிக் கொண்டும், அவர்களைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டும் மட்டுமே இருக்க வேண்டும். இன்னமும் இதிலிருந்து மாறாமல் அப்படியே இருக்கிறது தென்னிந்திய சினிமா” என அவர் குற்றம் சாட்டினார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான என்ற பிலிம்பேர் விருதையும் வென்றார். அதன்பிறகு குஷி, முகவரி, ஸ்டார், ராஜா, தூள், அருள், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இதில் காற்றின் மொழி மற்றும் ராட்சசி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இதையும் படியுங்கள்:
“உனக்கு சினிமா முகம் இருக்கு” - பாக்யராஜ் சொன்ன 8 வயது சிறுமி யார்?
Actress Jothika

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com