ஏப்ரல் மாதம் மட்டும் 4 பான் இந்திய படங்களின் அப்டேட்ஸ்!

Pan india movies
Pan india movies

இன்று ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் நான்கு பான் இந்திய படங்களின் அப்டேட்ஸ் இந்த மாதம் வெளியாகும் என்ற ரிப்போர்ட் வெளியாகி x தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பெரிய பட்ஜெட்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் வெற்றி இயக்குனர்கள் சிலர் பான் இந்தியா படங்களை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை. ரசிகர்கள் இந்தப் படங்களின் அப்டேட்கள் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் இந்த மாதம் அப்டேட்கள் வெளியாகவுள்ள செய்திகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் அந்த நான்குப் படங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

The Bull:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கரன் ஜோஹர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் செய்திகள் சென்ற ஆண்டே வெளிவந்தன. இதனையடுத்து இப்படத்தில் சல்மான் கான் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. அதன்பேரில் கரன் ஜோஹர் மற்றும் சல்மான் கான் ஆகியோர் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளதாகச் செய்திகள் வந்தன. முதலில் கரன் ஜோஹர் இயக்கிய 'குச் குச் ஹோத்தா ஹே' படத்தில் சல்மான் கான் நடித்தார்.

அதன்பின்னர் தற்போது மீண்டும் இணையவுள்ளனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிபோக, சல்மான் கான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். ஆகையால் the bull படத்தில் சல்மான் கானுக்கு பதிலாக வேறு யாரும் நடிப்பார்களா? அல்லது சல்மான் கானின் பிஸி லைனப் முடியும் வரைப் படக்குழு காத்திருக்குமா என்பது குறித்து இந்த மாதம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Pushpa 2 The Rule:

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா பாகம் 1 இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகையால் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. சந்தனக் கடத்தல் பற்றி சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் இம்மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Toxic:

யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகிவரும் படம்தான் டாக்ஸிக். கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு யாஷ் நடிக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. இப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று ரிப்போர்ட் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
தளபதி 69 ஓர் அரசியல் படமாக இருக்குமா? இயக்கப்போவது யார்?
Pan india movies

The GOAT:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The GOAT – The Greatest of All Time படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது என்ற அப்டேட் வரை ரசிகர்களுக்கு அத்துப்படி. இருப்பினும் படத்தைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இந்தப் படத்தின் அப்டேட் இந்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு சமீபத்தில் இதன் அப்டேட்கள் விரைவில் வரும், அவசரப்படாதீர்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com