
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் "கிங்" படத்திற்கான தீவிர சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது விபத்தில் சிக்கினார் .
ஷாருக்கான் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அதில் வந்த கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத் தொலைக்காட்சி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சற்றும் எதிர்பாராத விதமாக அவருக்கு தில் அஸ்னா ஹா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷாருக், மும்பைக்கு சென்றார். தொடர்ந்து பாசிகர், தர், கரண் அர்ஜுன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹை, தேவதாஸ், ஸ்வதேஸ், சக் தே இந்தியா போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டின் பாட்ஷாவாக மாறினார். திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினர்.ஷாருக்கான்.
இவர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மும்பையில் இன்று வழக்கம் போல் 'கிங்' படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு எதிர்பாராத விதமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர்.
கிங்கின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர்/அக்டோபரில் தொடங்கும், ஏனெனில் ஷாருக்கானுக்கு காயம் குணமடைய சிறிது நேரம் ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயத்திலிருந்து முழுமையாக மீண்ட பிறகு, அவர் மீண்டும் முழு பலத்துடன் படப்பிடிப்புக்கு வருவார்" என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.