'STR 48' : கமல், சிம்பு, தேசிங் பெரியசாமி சந்திப்பு! என்ன அப்டேட்?

'STR 48' : கமல், சிம்பு, தேசிங் பெரியசாமி சந்திப்பு! என்ன அப்டேட்?

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பத்து தல'. இப்படத்தில் சிம்பு, தாதா கெட்டப்பில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அவரது நடிப்பில் சமீபத்திய படங்களான 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' என அனைத்தும் அவருக்கு வெற்றியைக் கொடுத்துவந்த நிலையில், அடுத்ததாக 'STR 48' படத்தில், முதன்முதலாக நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கிறார்.

2020ல் துல்கர் சல்மான நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமிதான் 'STR 48' படத்தை இயக்குகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் சிம்பு நடிக்கும் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 9ஆம் தேதியே வெளியான நிலையில், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

தற்போது நடிகர் சிம்பு, 'STR 48' படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து சென்று அங்கு பல கலைகளை கற்றுக்கொண்ட பின்னர், சமீபத்தில்ல் லண்டன் சென்று அங்கும் சில பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு நடிப்பில் உருவாகும் இப்படம், வரலாற்றுப் பின்னணியை உடைய கதையம்சத்துடன் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது. இதையடுத்து, படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாகவும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் சிம்பு, இயக்குநர் தேசிங் பெரியசாமி இருவரும் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளனர். அப்போடு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com