மூக்குத்தி அம்மன் 2 படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி உருவாகி வருகிறது. ஹிட் படத்தை கொடுத்த சுந்தர் சிக்கு இந்தப் படத்தில் வரும் பிரச்சனைகளால் தலைவலிதான் வந்துக்கொண்டிருக்கிறது.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.
இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த பேச்சு எழுந்தது. முதலில் இதன் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்றும், நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது.
ஏனெனில், ஆர்ஜே பாலாஜி இதற்கு ஒரு பெரிய சம்பளத்தை கேட்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த டீம் அப்படியே விலகியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எடுக்கிறார். நயன்தாராவே மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
இப்படம் ஷூட்டிங் ஆரம்பித்திலிருந்தே பல பிரச்சனைகள் நடக்கின்றன. அதாவது உதவி இயக்குனர் ஒருவரை கடுமையாக நயன்தாரா திட்டிவிட்டாராம். இதை அறிந்த சுந்தர் சி மிகுந்த கோபத்தில் அவரை வைத்து படம் எடுக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். பின்னர் தயாரிப்பாளர் தலையிட்டு பிரச்சனையை முடித்தாராம்.
மேலும் ஷூட்டிங் நடத்துவதற்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடங்களில் லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். அங்கே உள்ள கோயில்களில் இதன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி. ஆனால் நயன்தாரா அங்கெல்லாம் வரமுடியாது, சென்னையிலேயே முடிக்கலாம் என்று கூறுகிறாராம்.
ஊர்வசியின் மூட்டு வலி பிரச்சனை, வில்லன் கதாபாத்திரம் செய்பவர் துனியா விஜய். அவருக்கும் பிசியான செட்யூல் போன்ற காரணங்களால் ஷூட்டிங் முழுவதுமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதாம்.