6G தொழில்நுட்பம்: உலகை இணைக்கும் புதிய அத்தியாயம்!

6G
6G6G
Published on

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்து வருகிறது. முந்தைய தலைமுறைகளான 3ஜி, 4ஜி மற்றும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 5ஜி தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து, உலக நாடுகள் அடுத்த கட்டமான ஆறாம் தலைமுறை (6G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் வயர்லெஸ் தகவல் தொடர்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6ஜி என்பது முற்றிலும் கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம். இது இன்றைய இணைய சேவைகளின் வேகத்தையும் செயல்திறனையும் பல மடங்கு அதிகரிக்கும். இணையம் சார்ந்த விஷயங்களின் பரவலான பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் 5ஜி முக்கிய பங்காற்றியது. அதேபோல், 6ஜி தொழில்நுட்பம் இந்தத் துறைகளை மேலும் மேம்படுத்தும்.

மருத்துவத் துறையில் மேம்பட்ட சிகிச்சைகள், வணிகம் மற்றும் கல்வித்துறையில் புதிய வாய்ப்புகள், பொழுதுபோக்கு மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகள் என பல்வேறு துறைகளிலும் 6ஜி ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. உதாரணமாக, மிக அதிக தெளிவுத்திறன் கொண்ட திரைப்படங்களைக் கூட நொடிப் பொழுதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. பிற நாடுகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன. 6ஜி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச தரநிலைகளை நிர்ணயிப்பது குறித்து உலகளாவிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், 5ஜி தொழில்நுட்பமே இன்னும் பல நாடுகளை முழுமையாக சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக விரைவில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி தரநிலைகளை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜி தொழில்நுட்பம் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிக லாபம் தரும் புதிய தொழிலாகும் டைனோசர் வளர்ப்பு முறை! What?!
6G

தற்போது, அதிக எண்ணிக்கையிலான 5ஜி அடிப்படை நிலையங்களை கொண்டுள்ள நாடாக சீனா விளங்குகிறது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் 6ஜி ஆராய்ச்சியில் தீவிரமாக உள்ளன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனம் 2028 ஆம் ஆண்டு முதல் 6ஜி-க்கான முன்னோட்ட சோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

6G தொழில்நுட்பம் வெறும் வேகமான இணைய இணைப்பை மட்டும் வழங்காது. இது பல்வேறு துறைகளில் புதுமையான மாற்றங்களை உருவாக்கி, உலகை மேலும் இணைக்கும் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொழில்நுட்பப் பந்தயத்தில் எந்த நாடு முன்னிலை பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
AI தொழில்நுட்பம்: 10 சுவாரஸ்யமான உண்மைகள்!
6G

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com