ஜூன் 27ம் தேதி தியேட்டரில் வெளியாகும் சூப்பர் படங்கள்!
தமிழ்த் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சில திரைப்படங்கள், வரும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. யார் யார் படங்கள்?? என்னென்ன படங்கள் என்று பார்ப்போமா?
குறிப்பாக, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'க க ந மார்கன்' திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. லியோ ஜான் பால் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஒரு அழுத்தமான கதைக்களத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், விக்ரம் பிரபு நடித்துள்ள 'லவ் மேரேஜ்' திரைப்படமும் ஜூன் 27 அன்று வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் ஆகியோர் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. திருமண தாமதம் மற்றும் சமூகத்தில் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
அடுத்ததாக விஜய் கௌரிஷ், ஸ்மேகா மணிமேகலை ஆகியோர் இயக்கத்தில் எஸ் எஸ் முருகராசு இயக்கத்தில் உருவான கடுக்க படமும் வெளியாகிறது. விஜய் டிவி நாயகன் புகழ் நடிப்பில் மிஸ்டர் ஜுகீப்பர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் கண்ணப்பா படமும் ஜூன் 27 வெளியாகிறது. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய குமார், மஞ்சு விஷ்ணு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
ஜூன் 27ம் தேதி அன்று வெளியாகும் இந்த சூப்பர் படங்களை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்.