"சந்திரமுகி 2 பிரமாண்ட பொழுதுபோக்கு படம்" நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

chandramukhi 2
chandramukhi 2

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

டிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.

அவ்வபோது டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இதையடுத்து இயக்குநர் வாசு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிக்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸையும், ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத்தையும் வைத்து சந்திரமுகி 2ஆம் பாகத்தை உருவாக்கினார். இப்படம் கடந்த 28ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மிகப்பெரிய வெற்றிபடமான தன்னுடைய சந்திரமுகியை, புதிதாக வேறு ஒரு கோணத்தில் பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருப்பதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்காக நண்பர் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com