’தலைவர் 170’ படம் குறித்து சூப்பர்ஸ்டார் கொடுத்த புது அப்டேட்!

’தலைவர் 170’ படம் குறித்து சூப்பர்ஸ்டார் கொடுத்த புது அப்டேட்!

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170வது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் இந்திய அளவில் நல்ல வசூலை பெற்றது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள தலைவர் 170 படம் ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாக படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டுவருகிறது. அதன்படி படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manju Warrior, Dushara vijayan, Ritika Singh
Manju Warrior, Dushara vijayan, Ritika Singh

இந்நிலையில், இன்று லைகா வெளியிட்டுள்ள அப்டேட்டில் தலைவர் 170 படத்தில் நடிப்பு அசுரன் என்றழைக்கப்படும் ஃபகத் பாசில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் 170 படத்தின் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்றும். தலைவர் 170 படம் நல்ல கருத்துள்ள ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்றும், தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள தலைவர் 170 படத்தின் உண்மையான பெயர் விரைவில் வெளியாகும்” என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com