MuthuReRelease: ரஜினியின் ’முத்து’ ஜப்பானில் வெற்றிப்பெற காரணம் என்ன?

MuthuReRelease
MuthuReRelease

1995ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ’ முத்து’ திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி படம் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி, பிளாக் பஸ்டர் ஹிட்டான முத்து படம் இன்றைக்கு மீண்டும் திரையரங்குளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை பற்றி பேசுவதற்க்கு பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. இந்திய எல்லைகள் தாண்டி ஜப்பான் நாட்டில் வெற்றிப்பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமை முத்து படத்திற்கு உண்டு. ஜ ப்பானில் முத்து படம் வெற்றி பெற என்ன காரணம்? முத்து படம் வருவதற்க்கு பல ஆண்டுகள் முன்பே சத்தியேஜித்ரேவின் ’பாணி’ என்ற படம் ஜப்பானில் வெளிவந்துள்ளன. உண்மைக்கு மிக நெருக்கமான மிக யதார்த்தமான விஷயங்களை திரைப்படங்களாக உருவாக்குவதுதான் ஜப்பான் இயக்குநர்களின் ஸ்பெஷலாக இருந்தது.

இவர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக பக்கா கமர்சியல் அம்சங்கள் கொண்ட படமாக வந்தது ரஜினியின் முத்து. இந்தியாவில் முத்து வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து 1998ல் ஜாப்பனில்  "முத்து தி டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் வெளியானது. ஐப்பானில் சுமார் 450 மில்லியன் வரை வசூல் செய்தது சாதனைப்படைத்தது முத்து திரைப்படம்.

வசூலோடு நின்று விடாமல் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது."நாங்க அன்பு காட்டுறதல காட்டாறு மாதிரி" என்பதை போல முத்து வெளியிட்டுக்கு பின்பு தமிழ் ரசிகர்களை விட ஜப்பான் ரசிகர்கள் ரஜினி மீது அதிக அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.  இந்த அன்பின் விளைவாக 2018 ஆம் ஆண்டு முத்து படத்தை ரீ ரிலீஸ் செய்து பார்த்து மகிழ்ந்தார்கள் ஜப்பானியர்கள். நாம் இன்று ரீ ரிலீஸ் செய்து பார்க்கும் முத்துவை ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர்கள் பார்த்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
ரஜினியா? கமலா? - மாணவர்கள் சொல்வது என்ன?
MuthuReRelease

நம்மை போன்ற குடும்ப அமைப்பு ஜப்பானில் உள்ளது. முத்து படம் குடும்பம், செண்டிமெண்ட் என்ற அம்சங்கள் இருந்ததால் சுலபமாக ஜப்பானியர்கள் தங்களை கனெக்ட் செய்து கொண்டார்கள். முத்து திரைப்படம் தமிழ் நாட்டில் ரஜினியின் அரசியல் என்ட்ரியாக பார்க்கப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்க்கும், ரஜினிக்கும் கருத்து மோதல்கள் இருந்தது. முத்து படத்தில் வந்த சில வசனங்களும், காட்சிகளும் ஜெயலலிதாவிற்க்கு பதில் சொல்லும் விதமாக ரஜினி ரசிகர்கள் கருதினார்கள்.

இதுவும் முத்து பட வெற்றிக்கு முக்கிய காரணம். முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தை அக்காலகட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை பழைய நினைவுகளின் வழியே இப்படத்தை நினைவு கூறுவது மிக பொருத்தமாக இருக்கும். இந்த 28 ஆண்டுகளில்  அரசியல், சினிமா களங்கள் மாறிவிட்டது. மாறாதது ரசிகர்களின் அன்பு. இந்த அன்புதான் முத்து படத்தை ரீ ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com