சூர்யா 42... சூப்பர் அப்டேட் கொடுத்த டைரக்டர்

சூர்யா 42... சூப்பர் அப்டேட் கொடுத்த டைரக்டர்

சூர்யா படங்கள் என்றாலே சமீபகாலமாகவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், என தொடர்ந்து ஹிட் படங்கள். போதாக்குறைக்கு விக்ரம் படத்தில் ஒரே சீனில் வந்து பிரித்து மேய்ந்தது இன்னும் அவருடைய மாஸை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது சூர்யா 42 படத்தை இயக்க இருக்கும் சிறுத்தை சிவா, இப்படம் குறித்து சில சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் க்ரியேஷன் நிறுவனம் இணைந்துதான் பிரம்மாண்டமான பொருட்செலவில் சூர்யா 42 திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும்ம இப்படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக உருவாகிறது.

இசையமைப்பாளராக ஸ்ரீதேவி பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு வெற்றி பழனிச்சாமி கலை இயக்குனராகவும், படத்தொகுப்பாளராக நிஷாந்த் யூசுப்பும் பணியாற்ற உள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுத உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இப்படம் 10 மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், சூர்யா 42 படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பேண்டசி கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என 5 கதாபாத்திரங்களில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதை உறுதிப்படுத்தும்விதமாக, இப்போது வெளியாகியிருக்கும் மோஷன் போஸ்டரில் காண்பித்துள்ளனர்.

இப்படம் 1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடக்கும் கதையையும் மையப்படுத்தி அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com