பாலிவுட்டில் சூர்யா – ஜோதிகா! குடும்பத்தில் கருத்து வேறுபாடா?

பாலிவுட் பூமராங்
பாலிவுட்டில் சூர்யா – ஜோதிகா!
குடும்பத்தில் கருத்து வேறுபாடா?

மிழின் முன்னணி நட்சத்திர தம்பதி சூர்யா, ஜோதிகா குடும்பத்தினர் தற்சமயம் மும்பை மாநகரில் 9,000 சதுர அடியில், ` 70 கோடி மதிப்பில் வீடு வாங்கி குடியேறி யுள்ளனர். மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபல நட்சத்திங்கள் வசித்துவரும் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளதாகவும், சூர்யா குடும்பத்தினர் தங்குவதற்கான கெஸ்ட் ஹவுஸ் இது என்றும் கூறப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட சூர்யா – ஜோதிகா தம்பதியினர், பெற்றோர்கள் சிவகுமார் – லட்சுமிக்குச் சொந்தமான சென்னை தி.நகர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கார்த்தி – ரஞ்சனி தம்பதியும் இங்கேதான் சேர்ந்து வசிக்கின்றனர்.

2 டி எண்டர்டெயின்மெண்ட் என்கிற திரைப்படம் மற்றும் வெப் தொடர் தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா – ஜோதிகா நடத்தி வருகின்றனர்.

தற்போது, குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அவர்களது விருப்பப் பாடங்கள் கொண்ட கல்லூரி மும்பையில் இருப்பதால், தற்காலிகமாக இங்கே குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்சமயம் சூர்யா நடிக்கும் 42ஆவது படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதை சிவா இயக்க, சூர்யாவின் உறவினர் கே. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷாபதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஜோதிகா இந்தி வெப் தொடர் மற்றும் மலையாளப் படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் ஹீரோ அக்ஷய்குமாருடன் இணைந்து சிறப்பு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். ஹீரோவாக இந்திப்படத்தில் நடிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் ஏற்கெனவே ஜோதிகா நடிப்பதால், சூர்யாவுக்கு இந்தி கற்றுக் கொடுக்கப்பதற்கும், இந்தியில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கவும் கூட மும்பை வாசம் ஒரு காரணம்.

மற்றபடி பெற்றோர்கள், சகோதரர் ஆகியோருடன் கருத்து வேறுபாடு எதுவுமில்லையாம்!

(எதிர்காலம் முக்கியம்தானே!)

மூக்கில் மச்சம் எனக்கு ஓ.கே!

பாலிவுட்டின் மூத்த நடிகை இஷா கோபிகர் சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் சிவகாரத்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸி என்றாலும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில், “உங்களின் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. பேட்டியில் கூறியது:

“தற்சமயம் 20 வயது நிரம்பிய பெண்கள்கூட தங்களை அழகுபடுத்திக்கொள்ள அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். வயதானதைத் தாமதப்படுத்தும் முயற்சியில் பலர் தங்களின் சருமத்தில் பயன்படுத்தும் அனைத்து விஷயங்களையும் காண்கையில், சற்றே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

உங்களின் குறைபாடுகளை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். என் முகத்திலிருக்கும் ஒரு மச்சத்தை படத்துக்காக நீக்கச் சொன்னார்கள். மறுத்துவிட்டேன். மச்சம் இருந்தால் என்ன தவறு? ஏதோ காரணத்துடன்தான் கடவுள் என்னை இவ்வாறு படைத்துள்ளார். அதை எதிர்த்து விளையாடுவதை விரும்பவில்லை. மச்சம் எனக்கு ஓகே.

இப்பூமியில் நான் படைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்வடைகிறேன். முன்பிருந்த பல நடிகைகள் ஹீரோ, இயக்குனர் ஆகியோர்களின் ஈகோவுக்கு ஆளாக வேண்டி இருந்தது. ஆனால், இன்று அளவில்லாத திறமை இருந்தால் ஜெயித்துக்கொண்டே இருக்கலாம். இது மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயமாகும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com